Aran Sei

‘மாஸ்டர்’ படம் வெளியாகுமா? – திரையரங்குகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியில் சிக்கல்

கொரோனா பெருந்தொற்று இந்தியாவில் பரவத் தொடங்கியதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டன. மாதக்கணக்கில் மூடப்பட்டிருந்த திரையரங்குகள், 50% இருக்கைகளுடன் செயல்பட்டுக் கொள்ளலாம் என்று கடந்த நவம்பர் மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது.

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், நடிகர் விஜய நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படமும், நடிகர் சிம்பு நடித்த ‘ஈஸ்வரன்’ திரைப்படமும் பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளன.

“இது என் வாழ்க்கையையே ஓடவைத்த தியேட்டர் அய்யா” – மிஷ்கினின் நினைவலைகள்

இந்நிலையில், நடிகர் விஜய், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இரண்டு தினங்களுக்கு முன் சந்தித்தார். அந்த சந்திப்பின்போது, திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் செயல்பட அனுமதியளிக்க வேண்டும் என்று அவர் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தார். இதே கோரிக்கையை நடிகர் சிம்புவும் முன்வைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்படுவதற்கு இன்று, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

‘இசை அண்ணாமலை’ – தேனிசை தென்றல் தேவா – மலர்வண்ணன்

கொரோனா பெருந்தொற்று இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படாத நிலையில்,  தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளன. தமிழக அரசு நூறு விழுக்காடு இருக்கைகளோடு அறிவிப்பு வெளியிட்டதை ‘கொரானா விதி மீறல்’ என்று மத்திய அரசு  உள்துறை அமைச்சகம் விமர்சித்துள்ளது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் தலைமைச் செயலருக்கு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

ஃபாசிஸ்ட் சினிமா – படம்காட்டி மக்களை ஏமாற்றி வந்த ஹிட்லர்

கொரோனா தடுப்புக்கான விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும்போது தமிழக அரசு அறிவித்தது முறையல்ல என்றும் விதிமுறைகளை நீர்த்துப் போகும்படியான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாதென மத்திய அரசு அறிவுருத்தியுள்ளது. கொரானா தடுப்பு குறித்து டிசம்பர் 28 ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின் படி நடக்குமாறு தமிழக அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது. திரையரங்குகளுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை திரும்ப பெறுமாறு மத்திய அரசு, தமிழக அரசிற்கு கடிதம் அனுப்பியுள்ளது.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்