Aran Sei

மே தின கொண்டாட்டத்திற்கு அனுமதி – தேர்தல் ஆணையரிடம் கோரிக்கை வைத்த சிபிஎம்

மே தின கொண்டாட்டங்களுக்குத் தேர்தல் நடத்தை விதிகள் / கொரோனா கட்டுப்பாடுகள் ஆகியவற்றை காரணம் காட்டி அனுமதி மறுக்க வேண்டாமென தலைமைத் தேர்தல் அதிகாரியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “உழைப்பாளர் தினமான மே தினம் ஒவ்வொரு ஆண்டும் பாடுபடும் தொழிலாளர்களால் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் நாளாகும். மாநில அரசாங்கமும் மே 1ந் தேதி விடுமுறை அறிவித்து இந்தக் கொண்டாட்டங்களுக்கு ஊக்கமளித்து வருகிறது. மே தின கொண்டாட்டங்கள் மே மாதம் முழுவதும் பரவலாக தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது. கொடியேற்றுவது, மே தினத்தின் சிறப்புகள் சம்பந்தமாக நிகழ்ச்சிகள் நடத்துவது ஆகியவற்றை தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களும் சிறப்புடன் இதைச் செய்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

பத்திரிகை சுதந்திரத்திற்கான தரவரிசையில் இந்தியா 142 வது இடம் – இந்துத்துவவாதிகளால் கேள்விக்குறியாகும் கருத்துரிமை என ஆய்வில் தகவல்

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கூட்டம் கூடுவது, நிகழ்ச்சிகள் நடத்துவது ஆகியவை சம்பந்தமான கட்டுப்பாடுகள் இருந்த போதும் கொடியேற்று நிகழ்ச்சியை மே 1ந் தேதி நடத்துவதற்கு அனுமதி மறுக்கக் கூடாது என்று மாவட்ட நிர்வாகங்களுக்குத் தெரிவிக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்வதாக மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மாநில தேர்தல் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்