Aran Sei

கிருஷ்ணகிரியில் பெரியார் சிலைக்கு டயர் அணிவித்து தீ வைப்பு : மர்ம நபரை கைது செய்யக் கோரி மக்கள் போராட்டம்

கிருஷ்ணகிரியில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள தந்தைப் பெரியார் சிலைக்கு டயர் அணிவித்து தீ வைத்த மர்ம நபர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சமத்துவபுரம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கத்தாழைமேடுவில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. சுமார் 150 வீடுகளைக் கொண்ட இந்தச் சமத்துவபுரத்தை கடந்த 2007 ஆம் ஆண்டு அப்போதைய ஊராக வளச்சித்துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்நிலையில், பெரியார் நினைவு சமத்துவபுரத்தின் நுழைவுவாயிலில் உள்ள பெரியார் சிலைக்கு, மர்ம நபர்கள் சிலர் டயர் அணிவித்து, தீ வைத்துள்ளனர்.

அன்பின் நீதிமான் அவர்களே, பெரியார் பேசுகிறார் – சத்யா

இன்று (மார்ச் 7) காலை, இதைப் பார்த்த அப்பகுதியினர், சிலைமீதிருந்த டயர்களை அகற்றி, தீயை அணைத்து பெரியார் சிலையைச் சுத்தப்படுத்தியுள்ளனர். அதைத் தொடர்ந்து, இச்செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களைக் கைது செய்யக் கோரி, பெரியார் சிலை முன்பு அமர்ந்து அப்பகுதி மக்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

நன்றி : புதிய தலைமுறை

இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த மகாராஜகடை காவல்நிலைய அதிகாரிகள், மர்ம நபரைக் கைது செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக  உறுதி அளித்து மக்களை சமாதானப்படுத்தியுள்ளனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்