சீர்காழியில், திராவிடர் கழத்தின் நிறுவனர் தந்தை பெரியாரின் சிலைக்கு, அடையாளம் தெரியாத நபர்களால் விபூதி பூசப்பட்டு, திலகமிடப்பட்டிருப்பதாக, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
விபூதி மற்றும் திலகத்துடன் இருக்கு பெரியாரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதை அடுத்து இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்களுக்குள்ள உரிமை பெண்களுக்கு இருக்கிறதா? -பெண்ணுரிமை செயல்பாட்டாளர் மேரி டி சில்வா கேள்வி
திராவிடர் கழகத்தினர் மற்றும் உள்ளூர்மக்கள் அந்தப் பகுதிக்கு வருவதற்கு முன் காவல்துறையினர் சிலையைச் சுத்தம் செய்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூண்டு அமைக்கப்படாத இந்தச் சிலைக்கு விபூதி பூசிய அந்தக் கும்பல், யாரும் இந்தச் செயலைப் பார்ப்பதற்கு முன்பு அங்கிருந்து கிளம்பிவிட்டனர் என தகவல்கள் தெரிவிப்பதாக, தி இந்து கூறியுள்ளது.
பாஜகவுக்கு உடந்தையாக இருக்கும் அதிமுகவை துடைத்தெறிய வேண்டும்: சீதாராம் யெச்சூரி
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து சீர்காழி துணை கண்காணிப்பாளரின் அலுவலகம் முன்பு திராவிடர் கழகம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆர்பாட்டம் செய்ததை அடுத்து, அடையாளம் தெரியாத நபர்கள்மீது காவல்துறையினர் வழக்கு பதிந்திருப்பதாக, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.