Aran Sei

’சாதி, மதம் கடந்து தமிழ்நாட்டுக்கென்று கொடி வேண்டும்’ – பெரியாரிய உணர்வாளர்களின் கோரிக்கைக்கு பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆதரவு

சாதி மதங்கள் கடந்து தமிழர்களை ஒருங்கிணைக்கும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் முயற்சிக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

இது குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் விடுதலைக்குப் பின் நிலவழி மாநிலம் எனும் தனது கருத்துக்கு மாறாக இருந்தபோதும், மக்களின் மொழிவழி மாநில உரிமைக் குரலுக்கு மதிப்பளித்த அன்றைய பிரதமர் நேரு, ‘மாநில மறுசீரமைப்புச் சட்ட’த்தை இயற்றினார். அதன்படி, 1956 நவம்பர் 1-ல் இந்தியா, 14 மாநிலங்களாகவும் 6 ஒன்றியப் பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டது. தமிழகம் சென்னை மாநிலம் என்றும், கர்நாடகம் மைசூர் மாநிலம் என்றும் கேரளம் தனியாகவும் நவம்பர்-1, 1956-ல் தனித்தனி மாநிலங்களாகின.

சமத்துவத்திற்கான நீண்ட போராட்டமும் மறுக்கப்படும் அரசியல் உரிமைகளும் – மீனா கந்தசாமி

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினமான நவம்பர்- 1ஆம் தேதியை நமது அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரா போன்ற மாநிலங்கள் அவர்களுக்கான தனிக்கொடியை ஏற்றிக் கொண்டாடி வருகிறார்கள். தமிழக அரசு 2019-ல்தான் முதன்முதலாக அரசு விழாவாகக் கொண்டாடியது. தமிழ்நாட்டுக்கு என்று தனியாக கொடி எதுவும் வடிவமைக்கப்படவில்லை.

கர்நாடக அரசு உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசுகள், தங்கள் மாநிலங்களுக்கென தனித் தனியே கொடிகளை அடையாளப்படுத்தி ஏற்றி மகிழ்ந்திடுவதுபோல், தமிழ்நாட்டு மக்களும் கட்சி சார்பற்ற நிலையில் ஒரு பொதுவான கொடியினை ஏற்றிக் கொண்டாடிட ஏதுவாக, தமிழ்நாடு தமிழறிஞர்கள், கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரின் கருத்தறிந்து தமிழ்நாடு அரசே தமிழ்நாட்டுக் கொடியை வடிவமைத்து அறிவித்திட வேண்டும். இந்தப் பெரும் விழாவை தமிழ்நாட்டில் உள்ள எல்லாக் கல்வி நிறுவனங்களிலும், அரசு அலுவலகங்களிலும், மாநகராட்சி முதல் ஊராட்சி அலுவலகங்கள் வரையிலும் உள்ள தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டுமென அரசு அறிவித்திட வேண்டும்.

‘இந்துக்களை மதமாற்றம் செய்பவர்களின் தலையை வெட்டுங்கள்’ – பாஜக தலைவர்கள் முன்னிலையில் பேசிய இந்துத்துவ தலைவர்

நவம்பர் 1ஆம் நாளை விடுமுறை நாளாக அறிவித்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு முன்வைத்துள்ளது. சாதி மதங்களைக் கடந்து தமிழர்கள் ஒருங்கிணைவதற்கு இந்த முன்னெடுப்பு உதவியாக இருக்கும் என்று மனிதநேய மக்கள் கட்சியும் கருதுகிறது.

தமிழக அரசு இந்தக் கோரிக்கையை ஏற்று தமிழர்களின் ஒற்றுமையை வலுப்படுத்த முன் முயற்சி மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக  மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்