Aran Sei

கேரளாவில் பாடமாகும் பெரியாரின் கருத்துக்கள் – திராவிட தேசியம் என்ற பாடத்தில் சேர்த்த கண்ணூர் பல்கலைக்கழகம்

கேரளாவின் கண்ணூர் பல்கலைக்கழத்தின் பாடத்தில் பெரியாரின் கருத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டத்தைக் கல்வியியல் குழு மாற்றியமைத்துள்ளது. இதில் முதுகலை நிர்வாகவியல் மற்றும் அரசியல் படிப்பில் இடம்பெற்றிருந்த சங்பரிவார், தீன்தயாள் உபாத்யாய், பல்ராஜ் மதோக் உள்ளிட்டோர் தொடர்பான பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.

திராவிட தேசியம் என்ற பாடத்தில் தந்தை பெரியாரின் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இ.எம்.எஸ் நம்பூதிரிபாட், ராம் மனோகர் லோஹியா ஆகியோர் குறித்த கருத்துக்களும் பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும் நவீன அரசியல் சிந்தனையில் தேசமும் தேசியமும் என்ற தலைப்பில் சாவர்க்கர், கோல்வாக்கர், முகமது அலி ஜின்னா, மெளலான அபுல் கலாம் ஆசாத் உள்ளிட்டோரின் கருத்துருக்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

Source : Puthiyathalaimurai 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்