ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகன் பேரறிவாளனுக்கு, சிறைகளில் பரவும் கொரோனா தொற்றின் காரணமாக நீண்ட விடுப்பு வழங்க வேண்டும் என்று அவரின் தாயார் அற்புதம்மாள் கோரிக்கை வைத்திருந்தார்.
அதைத்தொடர்ந்து பேரறிவாளனுக்கு மே 28 ஆம் தேதி முதல் ஒரு மாதகாலம் பரோல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
கடந்த மே மாதம் 28 ஆம் தேதி, புழல் சிறையிலிருந்து ஒருமாத கால பரோலில் பேரறிவாளன் விடுவிக்கப்பட்ட்டார். அதைத்தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றார்.
இன்று (ஜூன் 27), பேரறிவாளனின் ஒருமாத பரோல் நிறைவடைந்து புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரின் பரோல் மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தனது மகன் பேரறிவாளனுக்கு ஏற்கனவே பல்வேறு உடல்நல பாதிப்புகள் இருப்பதாலும், அவரின் பரோலை நீட்டிக்க வேண்டும் என்று அற்புதம்மாள் கோரிக்கை வைத்திருந்தார். தற்போது பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளதால், பேரறிவாளன் மீண்டும் அவரின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக, அற்புதம்மாள் தனது டிவிட்டர் பக்கத்தில், “30 ஆண்டுகளின் தனிமை சிறைவாசம் தந்துவிட்ட மன அழுத்தம், அதனால் ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக தொற்று, முடக்குவாதம், வயிற்று கோளாறு என தொடர் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலையில் கொரோனா தொற்று காலத்தில் சிறையில் இருப்பது பேராபத்து என சிறை அரசு மருத்துவர் அளித்த ஆலோசனை ஏற்று வீட்டிலிருந்தபடி தொடர் மருத்துவம் பெற விடுப்பு வழங்கப்பட்டு தற்போதுதான் மருத்துவம் தொடங்கி உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
30 ஆண்டுகளின் தனிமை சிறைவாசம் தந்துவிட்ட மன அழுத்தம், அதனால் ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக தொற்று, முடக்குவாதம், வயிற்று கோளாறு என தொடர் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலையில் கொரோனா தொற்று காலத்தில் சிறையில் இருப்பது பேராபத்து என சிறை அரசு மருத்துவர் அளித்த ஆலோசனை
(1/2)— Arputham Ammal (@ArputhamAmmal) June 28, 2021
மேலும், ”இச்சூழலில் அது தடைபடாமல் தொடர்ந்திடும் வகையில் அறிவுக்கு விடுப்பு நீட்டிப்பினை கனிவுடன் வழங்கிய மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்” என்று பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.