Aran Sei

காவல்துறையின் நடவடிக்கையால் பேரறிவாளனை சூழும் அபாயம் – வழக்கறிஞர் பிரபு

Image Credits: The Hindu

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைதாகி தற்போது மருத்துவக்காரணங்களுக்காக விடுப்பில் வந்துள்ள பேரறிவாளன், தினம் புதியபுதியக் காவலர்களுடன் காவல்நிலையம் சென்று கையெழுத்திட்டு வரக்கூறுவதால் கொரோனா நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதென அவரது வழக்கறிஞர் திரு.பிரபு அரண்செய்யிடம் கூறினார்

மேலும், இதற்கு முன்னர் பேரறிவாளன் பரோலில் வந்த போதெல்லாம் காவல்துறையினர் வீட்டிலேயே வந்து கையெழுத்து பெற்று வந்ததாகவும், ஆனால் தற்போது புதியநடைமுறையாக பேரறிவாளனை தினமும் காவல்நிலையம் அழைத்துச் சென்று கையெழுத்திடச்செய்வதாகவும் அரண்செய்யிடம் தெரிவித்தார்.

‘பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வை ரத்து செய்ய வேண்டும்’ – பிரதமருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் கடிதம்

இந்நிலையில், தினமும் வேறு வேறு காவலர்கள் வந்து வாகனத்தில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதால் ஏற்கனவே மருத்துவக் காரணங்களுக்காக விடுப்பில் வந்துள்ள அவருக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளதாக வழக்கறிஞர்.பிரபு அரண்செய்யிடம் கூறினார்.

‘எம்.பி நிதிக்கு தடுப்பு மருந்தை மறுத்த ஒன்றிய அரசு’ – மக்களுக்கு செய்யும் துரோகமென சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

மேலும், பேரறிவாளன் மருத்துவக் காரணங்களைத் தவிர வேறு காரணங்களுக்காக வீட்டை விட்டுச் செல்வதில்லை என்றும், மேலும், இதுவரை 180 நாட்களுக்கு பேரறிவாளன் சிறையிலிருந்து பரோலில் வந்துள்ள நிலையில் அப்போதெல்லாம் காவல்துறை நேரடியாக வீட்டுக்கே வந்து கையெழுத்துப் பெற்று சென்றுள்ளதாகவும் வழக்கறிஞர் பிரபு அரண்செய்யிடம் தெரிவித்தார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்