Aran Sei

காக்க வேண்டியது பழவேற்காட்டை, கம்பெனிகளை அல்ல – கிராம மக்கள் கூட்டறிக்கை

ழவேற்காடு சரணாலயப் பரப்பைச் சுருக்கிடும் வனத்துறையின் முயற்சிக்கு எதிராக மீனவர்களும் சூழலியலாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பழவேற்காடு சரணாலயத்தின் பாதுகாப்பு இடைவெளி தூரத்தை 10 கி.மீட்டரிலிருந்து 500 மீட்டராகச் சுருக்க தமிழ்நாடு வனத்துறை முயற்சியெடுத்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

’ அதானி குழுமத்துக்காக சுற்றுச்சூழலை பலி கொடுக்கும் அதிமுக – பாஜக அரசுகள்’ : ஸ்டாலின் விமர்சனம்

மேலும், வனத்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உயிர்ச்சூழல் மண்டலங்களுக்கான நிபுணர் குழுவுக்கும் (Expert Committee on Eco Sensitive Zones), தமிழக வனத்துறைக்கும் பதினைந்து கிராம குழுக்கள் ஒன்றிணைந்து கடிதம் எழுதியுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

வனத்துறையின் சரணாலயப் பரப்பைச் சுருக்கிடும் நடவடிக்கையானது எண்ணூர் பழவேற்காடு சதுப்புநிலப்பகுதியில் அமைக்கப்படவிருக்கும் மாசுபாடுத்தும் தொழில்களுக்கு மட்டுமே உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதானியின் இலாபவெறிக்குப் பலியாகப் போகும் சென்னை – பூவுலகின் நண்பர்கள்

வனத்துறை, உயிர்ச்சூழல் மண்டலத்தை (ESZ) 10 கி.மீட்டரிலிருந்து 500 மீட்டராகக் குறைக்க உயிர்ச்சூழல் மண்டலங்களுக்கான நிபுணர் குழுவிற்கு எழுதிய கடிதம் அந்தக் குழுவால் நிராகரிக்கப்பட்டுள்ளது என்றும் பழவேற்காடு பகுதி மக்கள் வெளியிட்டுள்ள அந்த அறிக்கை கூறுகிறது.

மேலும், வனத்துறை மக்களின் கருத்தைக் கேட்கவில்லை என்றும் , வனத்துறையின் இந்த நடவடிக்கை பழவேற்காட்டை அபகரிக்க நினைக்கும் தொழிற்நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வனத்துறையின் இந்த நடவடிக்கைகுறித்து தெரிவித்துள்ள சூழலியலாளர்கள், உயிர்ச்சூழல் மண்டலத்தில் துறைமுகங்கள் போன்ற மாசுபாடுடைய தொழில்கள் நடைபெறக்கூடாது என்று கூறியுள்ளதாகவும் பழவேற்காடு மக்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அழிந்துவரும் அலையாத்திக் காடுகள் – பாதுகாக்க வேண்டுமென ராமதாஸ் வலியுறுத்தல்

இதன் காரணமாக அதானி துறைமுகம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இந்நிலையில் இப்பகுதியில் பொன்னேரி தொழில் நகரத்தைத் தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பதன் காரணமாகச் சரணாலயப் பரப்பைச் சுருக்கும் நடவடிக்கையை வனத்துறை எடுத்திருக்கக்கூடும் என்று சூழலியலாளர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்நிலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் உயிர்சூழல் மண்டலம் அமையும் என்பதை அரசு அறிவிக்க வேண்டுமெனவும் பழவேற்காடு மக்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள சென்னை காலநிலை செயல்பாட்டு குழுவைச் சார்ந்த யுவன்.எம் , பல கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் பழவேற்காடு பிரச்சனை குறித்து குறிப்பிட்டுள்ளதாகவும் இந்தப் பிரச்சனை தேர்தலில் நிச்சயமாக எதிரொலிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதை ஊரின் பிரச்சனையாக மட்டுமில்லாது தமிழகத்தின் பிரச்சனையாக பார்க்கப்பட வேண்டும் என்றும் சூழலியலாளர் யுவன்.எம் தெரிவித்துள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்