Aran Sei

மக்களின் மருத்துவர் மறைந்தார் – டாக்டர் சாந்தா மறைவிற்கு தலைவர்கள் அஞ்சலி

சென்னை – அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவரும் உலக சுகாதாதர நிறுவனத்தின் சுகாதார ஆலோசனைக் குழு உறுப்பினருமான மருத்துவர் சாந்தா (93) அவர்களின் மறைவையொட்டி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின், பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் திருமாவளவன், கனிமொழி ஆகியோர் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளனர்.

இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் ஆகிய விருதுகளைப் பெற்ற பெருமைக்குரிய மருத்துவர் சாந்தா, தனது இறுதிமூச்சு வரையில் புற்றுநோயிலிருந்து மக்களைக் காக்கும் பணிக்கு தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டவர்.

“தேர்தல் வெற்றிக்காக அணு ஆயுத நாடுகளை போரின் விளிம்பிற்குத் தள்ளினார் மோடி” – இம்ரான் கான் குற்றச்சாட்டு

மருத்துவர் முத்துலட்சுமிரெட்டி அம்மையார் தொடங்கிய அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சிமையத்தை இன்று உலகப் புகழ்பெற்ற மருத்துவமனையாக உயர்த்திய மாபெரும் சாதனையைப் படைத்தவர். எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றியவர். அவருடைய மருத்துவத்துறைக்கு பேரிழப்பாகும்.

அவருடைய மறைவையுட்டி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ”அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் பத்மஸ்ரீ Dr.வி.சாந்தா அவர்கள் இன்று உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தாருக்கும், அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அன்னாரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த மருத்துவர் வி.சாந்தா அவர்களின் புகழுக்கு பெருமைசேர்க்கும் வகையிலும், அவரது தன்னலமற்ற சேவையை கௌரவிக்கும் விதமாகவும் அன்னாரின் இறுதி சடங்குகளின் போது காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி மரணங்கள், பக்க விளைவுகள் – காரணம் என்ன?

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் “பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகள் வென்றுள்ள இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்க தன்னலமின்றி அர்ப்பணிப்போடு பணியாற்றியதால் மாண்புமிகு அம்மா அவர்கள் உட்பட அனைவரது பாராட்டுக்களையும் பெற்றவர். அவரது மறைவு புற்றுநோய் துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.” என்று கூறியுள்ளார்..

”ஏழைகளும் புற்றுநோய்க்கு எளிதில் சிகிச்சை பெற அர்ப்பணிப்புடன் உழைத்தவர். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்” என்று திமுக தலைவர் ஸ்டாலின் தன்னுடைய இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள இரங்கலில், “அவரின் மறைவு உலகெங்கும் இருக்கும் புற்றுநோய் நோயாளிகளுக்கும், ஏழை, எளிய மக்களுக்கும், மருத்துவ உலகிற்கும், தமிழக மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். மறைந்த டாக்டர் சாந்தா அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அஞ்சலியைச் செலுத்துகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

‘ஜிஎஸ்டியால் மாநிலத்திற்கு நிரந்தர வருமானம் என்று நம்பியது பொய்யாய் போனது’ – ஓ.பன்னீர்செல்வம்

“அவரது ஈடு இணையற்ற ஈகத்தையும் மருத்துவப் பங்களிப்பையும் போற்றும் வகையில் அரசு மரியாதையுடன் அவரை நல்லடக்கம் செய்ய வேண்டுமெனவும் இந்திய உயரிய விருதான ‘பாரத்ரத்னா’ விருதினை வழங்கிச் சிறப்பிக்க வேண்டுமெனவும் விசிக சார்பில் வலியுறுத்துகிறோம்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பதவி உயர்வுகளில் எஸ்சி/எஸ்டி ஒதுக்கீடு – உச்சநீதிமன்ற வழக்கில் புதிய உத்தரவு

”புற்றுநோயியல் நிபுணரும் மனிதாபிமானமுமான மருத்துவரான டாக்டர் வி.சாந்தா காலமானதால் நான் வருத்தப்படுகிறேன். புற்றுநோய்க்கு தரமான மலிவான மருத்துவத்தை, அடையார் புற்றுநோய் நிறுவனம் மூலம் அளித்த அவர், மிக எளிமையாக அனுகக்கூடியவராகவும் இருந்தார். டாக்டர் சாந்தாவின் சேவை வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு உண்மையான உத்வேகமாகும்” என்று நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கணிமொழி தன்னுடைய இரங்கல் குறிப்பில் கூறியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்