Aran Sei

“மதச்சார்பற்ற வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்” – அசாம் கிறிஸ்தவ மன்றம் வேண்டுகோள்

னைத்து மக்களையும் உள்ளடக்கிய மதச்சார்பற்ற சமூகத்தை விரும்பும் வேட்பாளர்களுக்கு வாக்களித்து, இந்திய அரசியலமைப்பை நிலைநிறுத்துமாறு,  அசாம் மாநிலத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அசாம் கிறிஸ்தவ மன்றம் (ஏசிஎஃப்) வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக, அந்த மன்றம் விடுத்துள்ள கோரிக்கை அறிக்கையில், குடியுரிமை (திருத்தச்) சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டால், மக்கள் பாதிக்கப்படுவது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

“சிறுபான்மையின மக்கள் பெரிய அளவில்  அச்சுறுத்தப்படுவதால், நாம் ஒரு உள்ளடக்கிய சமூகத்தைப் பற்றிப் பேசுகிறோம். பீமா கோரேகான் வழக்கில் பேராயர் ஸ்டான் சுவாமி கைது செய்யப்பட்டது ஒரு உதாரணம். மற்றொன்று மதம் சார்ந்த குடியுரிமை திருத்தச் சட்டம். ஆனால் மதத்திற்கும் குடியுரிமைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று ஏசிஎஃப் செய்தித் தொடர்பாளர் ஆலன் புரூக்ஸ் தெரிவித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, அசாமின் 3.3 கோடி மக்கள் தொகையில் 3.74% கிறித்தவர்கள் உள்ளனர்.

Source : The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்