லட்சத்தீவில் யூனியன் பிரதேச அரசால் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள சட்டங்களுக்கு எதிராக ஜூன் 7 அன்று காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரை 12 மணிநேரம் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ‘லட்சத்தீவைக் காப்போம் குழு’ அறிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
லட்சத்தீவை ஆட்டிப் படைக்கும் இந்த பிரஃபுல் படேல் யார்? – பேராசிரியர் அ.மார்க்ஸ்
கொச்சியில் நேற்று இரவு நடந்த கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், உடல் நிலை சரி இல்லாதவர்கள் அல்லது சிகிச்சையில் உள்ளவர்கள் மட்டும் பங்கேற்க வேண்டாமெனக் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த மக்கள் விரோத சட்டவரைவை சட்டப்படி எதிர்கொள்ளவுள்ளதாகவும், இதற்காக சட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக உழைத்து வருவதாக லட்சத்தீவைக் காப்போம் குழு அறிவித்துள்ளதாகவும் தி இந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘காவி அரசியல் புறவாசல் வழியாக புகுத்தப்படுகிறது’ – லட்சத்தீவு மக்களுக்கு ஆதரவாக கேரள அரசு தீர்மானம
நேற்றைய தினம் நடந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசல், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.பி.கோயா மற்றும் இதர உறுப்பினர்கள் கலந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.