Aran Sei

தரமான சாலைகள் வேண்டும் என்றால் கட்டணம் செலுத்துங்கள் – நிதின் கட்கரி

ரமான சாலைகள் போன்ற சிறப்பான சேவைகள் வேண்டுமானால் மக்கள் கட்டணம் செலுத்தித்தான் ஆக வேண்டும் என்று ஒன்றிய அரசின் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

சுங்கச்சாவடிக் கட்டணம்குறித்து எழுப்பப்பட்ட   கேள்வியின்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விரைவுச் சாலைகளில் சுங்கக்கட்டணம் விதிக்கப்படுவது அந்தச் சாலையின்  பயணச் செலவை அதிகரிக்கும்  என்பது குறித்து எழுப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த நிதின் கட்கரி, “நீங்கள் குளிர்சாதன அரங்கைப் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்றால் நீங்கள் அதற்காகக் கட்டணம் செலுத்தவேண்டும். இல்லையென்றால், விவசாய நிலத்தைக் கூட நீங்கள் திருமண அரங்காகத் தயார் செய்து கொள்ளலாம்”  என்று கூறியுள்ளார்.

மேலும், விரைவுச் சாலைகளின் தரம் என்பது பயண நேரம், எரிபொருளுக்கான செலவும் குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Source:THE INDIAN EXPRESS

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்