Aran Sei

‘சென்னையில் இருந்து வெளியேற்றப்படும் மக்களுக்கு வாழ்வாதரம் அளிக்கப்பட வேண்டும்’ – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

லுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு கடந்த ஒரு மாதகாலமாக வீடற்றோர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதார நலனில்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே தெருவோரத்தில் பல்லாண்டு காலமாக  வாழ்ந்து வந்த மக்களை அக்டோபர் 16 அன்று வலுக்கட்டாயமான முறையில் வெளியேற்றி கண்ணப்பர் திடல் அருகில் உள்ள வீடற்றோர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களுக்கு 20 நாளில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் கொடுக்கப்படுமென  எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அப்போது வாக்குறுதி அளித்திருந்தார்.

தமிழ்நாட்டில் கோட்சே நினைவேந்தல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி வேண்டுகோள்

இச்சூழலில் ஒரு மாதம் கழிந்தும் மக்களுக்கான உரிய குடியிருப்புகள் இதுவரை ஒதுக்கப்படவில்லை. இரண்டு  அறைகளைக் கொண்ட  வீடற்றோர் காப்பகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களை தங்க வைத்திருப்பது கண்ணியமற்ற செயலாகும். தாய்ப்பால் அருந்தும் குழந்தை முதல் ஐந்து வயதிற்கு கீழான குழந்தைகள் பலர் உள்ளனர். இக்குழந்தைகளுக்குத் தேவையான பால்,பிஸ்கட் உள்ளிட்ட சத்தான உணவுப் பொருட்கள் எதுவும் மாநகராட்சியால் இதுவரை வழங்கப்படவில்லை.

தங்களது தொழில் சார்ந்து பணிகளில் ஈடுபட்டு உழைத்து அதன் மூலம் தேவையான உணவுப் பொருட்களை உட்கொண்டு வந்த மக்களை, உரிய குடியிருப்புகளை அளித்திடாமல் தேவையான உணவுப் பொருட்களை வழங்காமல், நூற்றுக்கும் மேற்பட்ட மக்களை இரண்டு அறைகளில் கடந்த ஒரு மாதமாக தங்க வைத்திருப்பது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மார்க்சிஸ்ட் கட்சி மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி. செல்வா மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ் கே முருகேஷ் வெ ஆறுமுகம், பகுதிச் செயலாளர் கே முருகன் பகுதி குழு உறுப்பினர் ஜி.புகழேந்தி, மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் என் மனோகர் ஆகியோர்  நவம்பர் 17 மக்களை நேரடியாக சந்தித்து பேசினர்.

மாற்று குடியிருப்புகள் எதுவும் ஒதுக்காமல்  வலுக்கட்டாயமாக அவர்கள் வசித்து வந்த இடத்தில் இருந்து வெளியேற்றியபோதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

லக்கிம்பூர் கெரி வன்முறை: விசாரணையை மேற்பார்வையிட உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியை நியமித்தது உச்சநீதிமன்றம்

எனவே  தமிழக அரசு, சென்னை மாநகராட்சி, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் போன்ற அமைப்புக்கள் இப்பகுதி மக்களுக்கு உடனடியாக குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். தற்காலிக முகாமில் உள்ள மக்களுக்கு சத்தான உணவுகளும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும். குடியிருப்புகள் ஒதுக்கப்படும் வரை வாழ்வாதார நிதி (Subsistence Allowance) வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்