Aran Sei

மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள். பஞ்சாபை காப்பாற்ற வேண்டும் – தேர்தலில் போட்டியிடும் விவசாயிகள் சங்கம்

பாரம்பரிய கட்சிகளின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டதால் எங்களைத் தேர்தலில் போட்டியிடுமாறு மக்கள் அழுத்தம் கொடுத்தனர் என்று விவசாயிகளின் அமைப்பான சம்யுக்த சமாஜ் மோர்ச்சா தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் கூறியுள்ளார்.

“பஞ்சாபில் நிலைமை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இங்குள்ள மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். வேலையின்மை காரணமாக அவர்கள் அதிக அளவில் புலம் பெயர்ந்து வருகின்றனர். இது பஞ்சாபில் குற்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.” என்று பல்பீர் சிங் ராஜேவால் கூறியுள்ளார்.

பஞ்சாபில் உள்ள 117 சட்டமன்றத் தொகுதிகளிலும் சம்யுக்தா சமாஜ் மோர்ச்சா போட்டியிடும் என்று திரு ராஜேவால் கூறியுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 20-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Source : NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்