Aran Sei

பெகசிஸ் விவகாரம் : பஞ்சாப் மனித உரிமைச் செயற்பாட்டாளர் வேவு பார்க்கப்பட்டது ஆம்நெஸ்ட்டி ஆய்வில் உறுதி

ஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர் ஜகதீப் சிங் ரந்தவாவின்  தொலைபேசி, கடந்த 2019 ஆம் ஆண்டு பெகசிஸ் உளவு  மென்பொருள் வழியாக உளவு பார்க்கப்படடது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் ஜகதீப் சிங் ரந்தவா, கல்ரா மிஷன் என்ற அமைப்பில் பணிபுரிந்து வருகிறார். இந்த அமைப்பு மனித உரிமை மீறல்கள் தொடர்பாகச் செயல்பட்டு வரும் செயல்பாட்டாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களை உறுப்பினராகக் கொண்டது.

வழக்கறிஞர் ஜகதீப் சிங் ரந்தவாவின் பெயர் பெகசிஸ் உளவு மென்பொருள் வழியாக   உளவு பார்க்கப் பட்டதாகக் கருதப்படுபவர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், ஆம்நெஸ்ட்டி அமைப்பின் ஆய்வகத்தில்  ஜகதீப் சிங்கின் தொலைபேசியை ஆய்வு செய்ததில், 2019 ஆம் ஆண்டு  ஜூலை மாதம்   மற்றும்  ஆகஸ்ட் மாதத்தில்  ஐந்து நாட்களும் அவரது தொலைபேசி உளவு பார்க்கப்பட்டுள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

கல்ரா மிஷன் அமைப்பு பஞ்சாபில்  நடைபெறும் போலி என்கவுண்டர்கள்,  காவல்துறை வன்முறைகள் மற்றும் மர்மமான முறையில்  இறந்தவர்களை காவல்துறையால்  மறைமுகமாகத் தகனம் செய்யப்படுதல்  போன்றவற்றைக்  குறித்து ஆய்வு செய்யவும், வழக்கு நடத்தவும்  ஜஸ்வந்த் சிங் கல்ரா என்பவரால் தொடங்கப்பட்டது.

இந்த அமைப்பின் முக்கிய உறுப்பினராக ஜகதீப் சிங் ரந்தவா செயல்பட்டு வருகிறார்.

மேலும்,  இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது  பஞ்சாபில் நடந்த ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையின்போது ராணுவமும்,அரசும் மனித உரிமைகளை மீறி செயல்பட்டது  குறித்து,  கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம்    சர்வதேச நீதிமன்றத்தில்  எடுத்துரைத்த  கல்ரா மிஷன் அமைப்பைச் சார்ந்த எட்டு நபர்களில் ஜகதீப் சிங்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

source: the wire

தொடர்புடைய பதிவுகள்:

இராம்கோபால் குழுவின் அறிக்கையை நிராகரித்து ஐஐடிகளில் இடஒதுக்கீட்டை உறுதிசெய்க’ – சு.வெங்கடேசன் எம்பி வலிறுத்தல்

பெகசிஸ் தொடர்பாகப் பதிலளிக்க மாநிலங்களவையில் எழுப்பப்பட்டுள்ள கேள்வி – அனுமதியளிக்க கூடாது என அரசு கடிதம்

அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்