Aran Sei

பெகசிஸ்: ‘விசாரணையில் வெளிப்படைத்தன்மை வேண்டும்’ – விசாரணைக் குழுவுக்கு பத்திரிகையாசிரியர்கள் சங்கம் கடிதம்

ஸ்ரேல் நாட்டுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பெகசிஸ் ஸ்பைவேரை இந்திய அரசு 2017 இல் வாங்கியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, இதைக் கவனத்தில் கொண்டு இது குறித்து விசாரணை நடத்தும்படி உச்ச நீதிமன்றம் அமைத்த விசாரணைக் குழுவிற்கு இந்தியப் பத்திரிகையாசிரியர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

தி நியூயார்க் டைம்ஸின் அறிக்கையின்படி, 2017 இல் இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நடைபெற்ற ஒப்பந்தத்தில் பெகசிஸ் ஸ்பைவேர் மற்றும் அதிநவீன ஆயுதங்கள் வாங்க கையெழுத்தாகியுள்ளது. இதன் மதிப்பு ஏறத்தாழ 2 கோடி பில்லியன் டாலர் ஆகும்.

இது தொடர்பாக, இந்திய பத்திரிகையாசிரியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய குடிமக்களுக்கு எதிராக பெகசிஸ் ஸ்பைவேரைப் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை விசாரிக்கவும், இந்திய அரசு மற்றும் இக்குற்றச்சாட்டோடு சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சகங்களின் செயலர்களிடமிருந்தும் உறுதிமொழி பத்திரத்தைப் பெறவும் மாண்புமிகு இந்திய உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி ரவீந்திரன் தலைமையிலான குழுவிற்கு சங்கம் கடிதம் எழுதியுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

பெகசிஸ் ஒட்டுக்கேட்பு – ஒன்றிய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருக்கு எதிராக சிறப்புரிமைத் தீர்மானத்தைக் கோரும் காங்கிரஸ்

மேலும், “நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள கூற்றின்படி பார்த்தால், பெகசிஸ் தொடர்பான இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் முரணாக உள்ளது. இதன் வழியாக, இந்திய அரசு ஸ்பைவேரை வாங்கியதா என்ற கேள்விக்கும், பெகசிஸ் ஸ்பைவேரை வைத்து பத்திரிகையாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் உட்பட இந்திய குடிமக்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டிற்கும் தெளிவற்ற உறுதியற்ற பதிலே தொடர்கிறது” என்று அச்சங்கம் தெரிவித்துள்ளது.

இக்குழுவின் நடவடிக்கைகள் பொது மக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று இந்திய பத்திரிகையாசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பெகசிஸ் செயலி குறித்த முழுமையான தகவல்களை தெரிந்துகொள்ள அரண்செய் சிறப்பிதழை (உளவுக்குதிரை) படிக்கவும். இணைப்பு கீழே.

அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்