ஐபோன்களில், பெகசிஸ் உளவு செயலியை நிறுவுவதற்கு எதிராக, இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. நிறுவனத்தின் மீது ஆப்பிள் நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது.
பெகசிஸ் செயலியாக வழியாக உலகத் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டவர்களின் சென்போன்கள் உளவு பார்க்கப்பட்டது. பெகசிஸ் மென்பொருள் கொண்டு இந்தியாவைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், அரசு அதிகாரிகள், நீதிபதிகள், தொழிலதிபர்கள் ஆகியோர் பட்டியலில் தி வயர் இணையதளம் வெளியிட்டிருந்தது.
“குழந்தையின் வாயில் புணர்வது மிகப்பெரிய குற்றமல்ல” – அலகாபாத் உயர்நீதிமன்றம் விளக்கம்
எங்கள் பயனர்கள் மீதான எந்தவொரு தாக்குதலையும் நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம், மேலும் எங்கள் பயனர்கள் அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருக்க ஆப்பிளில் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைப் பாதுகாப்பை வலுப்படுத்த நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் கலிஃபோர்னியா நீதிமன்றத்தில், ஐ-போன்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், என்.எஸ்.ஓ. நிறுவனம் தனது செயலிகளை ஐ-போன்களில் சட்டவிரோதமாக நிறுவுவதற்கு தடைவிதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும், தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு நஷ்டஈடாக 75 ஆயிரம் அமெரிக்க டாலர்களை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
Source: www.apple.com
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.