Aran Sei

பெகசிஸ்: பேரழிவு விளைவுகளை தடுக்க அரசியல் நடவடிக்கைகளால் மட்டுமே முடியும் – எழுத்தாளர் அருந்ததிராய்

ந்தியாவில் உதிரப் பார்க்கும் கோடைக்காலம் உளவு பார்க்கும் கோடைக்காலமாக உருவெடுத்து வந்தது போல் தெரிகிறது.
நாற்பது லட்சம் உயிர்களைக் குடித்த பின் கொரோனாவின் இரண்டாவது அலை பின்வாங்கியுள்ளது. அரசின் அதிகாரபூர்வமான எண்ணிக்கை இதில் பத்தில் ஒரு பங்காக வெறும் நான்கு லட்சம் எனக் கூறுகிறது. மோடியின் நரகத்தில் தகன மேடைகளிலிருந்து எழும் புகை குறைந்து வரும் போதும், நிலம் கல்லறைகளால் நிரப்பப்படும் போதும், நமது வீதிகளில் தோன்றும் மாபெரும் பதாகைகள் ” மோடி ஜீ க்கு நன்றி” என்று கூறுகின்றன. (இது ஒரு வேளை பெரும்பாலும் கிடைக்காத இன்னும் 95% மக்கள் தடுப்பூசி பெறாத நிலையில் ” தடுப்பூசி இலவசம் ” என்ற அறிவிப்பிற்கு முன்னதாகவே நன்றி தெரிவிப்பதன் வெளிப்பாடாக இருக்கலாம்) மோடி அரசைப் பொறுத்தவரை உண்மையான இறப்பு எண்ணிக்கையை அட்டவணைப்படுத்தும் எந்த ஒரு முயற்சியும் இந்தியாவிற்கு எதிரான சதி செய்வதாகவே இருக்கிறது. ஒருவேளை வான்வழி புகைப்படங்களில் நீங்கள் காணும் இறந்து போன லட்சக்கணக்கானவர்கள் ஆழமற்ற குழிகளில் படுத்துக்கொண்டிருக்கும் நடிகர்களோ? அல்லது சடலங்கள் போல் மாறுவேடமிட்டு நதிகளில் மிதக்கிறார்களோ? அல்லது இந்தியாவின் நற்பெயரை கேவலப்படுத்த வேண்டும் என்ற உந்துதலில் நகரின் நடைபாதைகளில் தங்களுக்குத் தாங்களே சாலையோர நடைபாதையில் சிதைத்தீ வைத்துக் கொண்டார்களோ?

அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

80 புலனாய்வு ஊடகவியலாளர்கள் மற்றும் 17 ஊடகங்கள் ஆகியோர் ‘ஃபர்பிடன் ஸ்டோரீஸ்’ மற்றும் பன்னாட்டு மன்னிப்புக் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து உலகளவில் மிகப் பெரிய அளவில் நடைபெற்றுள்ள கண்காணிப்பு என்ற அசாதாரண செய்தியை வெளிப்படுத்தியதும், அதே குற்றச்சாட்டுக்களை இப்போது மீண்டும் இந்திய அரசும் அதன் உள்ளே உறைந்துள்ள ஊடகங்களும் முன் வைக்கின்றனர். இஸ்ரேலிய கண்காணிப்புக் கருவிகள் தயாரிக்கும் நிறுவனமான என்எஸ்ஓ குழுமத்தால் உருவாக்கப்பட்ட பெகாசஸ் உளவுப் பொருளை வாங்கியிருப்பதாகத் தோன்றும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் பட்டியலிடப்பட்டுள்ளது.

என்எஸ்ஓ தனது பங்கிற்கு அது தனது தொழில்நுட்பத்தை மனித உரிமைகள் பதிவுக்காக பரிசோதிக்கப்பட்ட, இந்த உளவுப் பொருளை தேசப் பாதுகாப்பு நோக்கங்களுக்காகவும், பயங்கரவாதிகள் மற்றும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க மட்டுமே பயன்படுத்துவோம் என்று உறுதியளிக்கும் நாடுகளுக்கும் மட்டுமே விற்பதாகக் கூறி உள்ளது. என்எஸ்ஓவின் மனித உரிமைகள் சோதனையில் வெற்றி பெற்ற நாடுகளில் ருவாண்டா, சவூதி அரேபியா, பஹ்ரெய்ன், ஐக்கிய அரபுகள் எமிரேட்ஸ் மற்றும் மெக்சிகோ ஆகியவையும் அடங்கும். எனவே “பயங்கரவாதிகள்” மற்றும் “குற்றவாளிகள்” என்ற வரையறையை யார் சரியாக ஒப்புக் கொண்டார்கள்? இது மிக எளிதாக என்எஸ்ஓவுக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் மட்டுமே பொருந்துமா?
இந்த உளவுப் பொருளின் விலை ஒரு தொலை பேசியை ஒட்டுக் கேட்பதற்கே பல ஆயிரக்கணக்கான டாலர்கள் என மிக அதிகமாக இருப்பதுடன், இதற்கான ஆண்டு பராமரிப்புக் கட்டணமாக ஒட்டுமொத்த செயல்முறைக்கான விலையில் 17% ஐ என்எஸ்ஓ வசூலிக்கிறது. ஒரு நாட்டின் அரசாங்கத்திற்காக அந்த நாட்டின் தனிப்பட்ட குடிமக்களை கண்காணிக்க ஒரு வெளிநாட்டு கார்பரேட் நிறுவனத்தை பணியமர்த்துவதிலும், பராமரிப்பதிலும் ஏதோ ஒரு தேசத்துரோகம் இருக்க வேண்டும்.

கோழி, ஆடு மற்றும் மீனை விட மாட்டிறைச்சியை அதிகமாக சாப்பிடுங்கள் – மேகாலயா பாஜக அமைச்சர் பேச்சு

புலனாய்வுக் குழு கசியவிடப்பட்ட 50,000 கைப்பேசி எண்களை பரிசோதனை செய்தது. அந்த பகுப்பாய்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் என்எஸ்ஓவின் வாடிக்கையாளர்களாக இருப்பதைக் காட்டுகிறது. ஒரு எண் வெற்றிகரமாக வயப்படுத்தப்பட்டுள்ளதா (hacked) இல்லையா அல்லது வயப்படுத்துவதற்கான முயற்சி நடந்ததா என்பது அந்த கைப்பேசிகளை தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தினால்தான் தெரியும். அவ்வாறு சோதனைக்கு உள்ளாக்கியதில் ஏராளமான இந்தியர்களின் கைப்பேசிகள் பெகாசஸ் உளவுப் பொருளால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சி தலைவர்கள், எதிர்கருத்து ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், அறிவார்ந்தவர்கள், தொழிலதிபர்கள், ஒரு இணக்கமற்ற இந்திய தேர்தல் ஆணைய அதிகாரி மற்றும் ஒரு இணக்கமற்ற மூத்த உளவுத்துறை அதிகாரி, அமைச்சர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர், அந்நிய தூதரக அதிகாரிகள் ஆகியோருடன் பாகிஸ்தான் தலைமை அமைச்சா் இம்ரான் கானின் பெயரும் அந்தப் பட்டியலில் உள்ளது.

அழுகுரலின் நெடுங்கதை – கொரோனா காலமும் பாதிக்கப்பட்ட தனியார் கல்லூரி பேராசிரியர்களும்

இந்தப் பட்டியலைப் போலி என இந்திய அரசின் செய்தித் தொடர்பாளர் கண்டித்துள்ளனர். ஒரு திறமையான மற்றும் அறிவுள்ள புனைக்கதை எழுத்தாளரும் கூட இத்தகைய ஆளும் கட்சியின் நலன் விரும்பிகள் அல்லது அதன் அரசியல் செயல்திட்டத்திற்கு எதிரானவர்கள் ஆகியோரின் பொருத்தமான பட்டியலை கட்டமைக்க இயலாது என்பதை இந்திய அரசியலை உற்று நோக்குபவர்கள் அறிவார்கள். இது வியக்கத்தக்க நுணுக்கமான கதைக்குள் கதைகள் நிறைந்தது. எதிர்பாராத சிலரது பெயர்கள் இதில் உள்ளன.

ஆனால் எதிர்பார்க்கப்பட்டப் பெயர்கள் இல்லை. பெகாசஸ் ஒரு தவறவிட்ட அழைப்பு(missed call) என்ற ஏவுகணை மூலம் அனுப்பப்பட்ட கண்ணுக்குப் புலப்படாத உளவுப் பொருள் என்ற வெடிகுண்டு. ஒரு வகையில் கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணை போன்றது. அதிகார வர்க்கத்தின் சிவப்பு நாடா பற்றிய கவலையின்றி ஜனநாயகங்களை கலைக்கவும், சமூகங்களை அணுக்களாக சிதறடிக்கவும் வல்லவை. உறுதியளிப்புத் தேவை இல்லை, ஆயுத ஒப்பந்தங்கள் தேவையில்லை, கண்காணிப்புக் குழுக்கள் தேவையில்லை, எதுவாக இருந்தாலும் எந்த வகையான ஒழுங்கு முறைவிதிகளும் தேவையில்லை. தொழில்நுட்பம் நிச்சயமாக மதிப்பு நடுநிலை கொண்டதுதானே. அது யாருடைய தவறும் அல்ல.

டெல்லியில் தகர்க்கப்பட்ட கிறிஸ்தவ ஆலயமும் இந்தியக் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களும் – அ.மார்க்ஸ்

2017 ல் என்எஸ்ஓ விற்கும் இந்தியாவிற்கும் இடையில் இஸ்ரேலில் ஒரு நட்பு அடிப்படையிலான ஒத்துழைப்புத் துவங்கியது. அப்போது இந்திய ஊடகங்கள் மோடி-நெதின்யாகு நட்பை “ப்ரோமான்ஸ் (இரு ஆண்களுக்கிடையிலான நெருங்கிய தொடர்பு)” என்று அழைத்தன. அவர்கள் இருவரும் தங்கள் கால் சட்டையை மடித்துவிட்டுக் கொண்டு ஒன்றாக சேர்ந்து தோர் கடற்கரையில் உலா வந்தனர். அந்த மணற்பரப்பில் தங்கள் கால்தடங்களை மட்டுமின்றி அதைவிட அதிகமானவற்றை விட்டுச் சென்றனர். பிறகு இந்த சமயத்தில்தான் இந்திய எண்கள் பட்டியலில் தோன்ற ஆரம்பித்தன.

அதே ஆண்டு தேசிய பாதுகாப்புக் குழுவின் செயலகச் செலவு பத்து மடங்கு உயர்ந்துள்ளது. அதிகரித்தத் தொகையில் பெருமளவு இணைய குற்றங்களிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக என ஒதுக்கப்பட்டது. 2019, ஆகஸ்ட் மாதத்தில், மோடி இரண்டாம் முறையாகத் தலைமை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே, இந்தியாவின் கொடூரமான, பிணையில் வெளிவர முடியாத, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்(தடுப்பு) சட்டம்(UAPA) ஆகியவற்றை வெறும் அமைப்புகளின் மீது மட்டுமின்றி தனிநபர் மீதும் ஏவலாம் என விரிவாக்கப்பட்டது. அமைப்புகள் திறன்பேசியை வைத்திருப்பதில்லைதான்-கோட்பாட்டு ரீதியாக இருந்தாலும் இது ஒரு முக்கிய விவரம். ஆனால் நிச்சயமாக இது ஆட்சியையும், சந்தையையும் நீட்டிக்கச் செய்யும்.

‘ஜெய்பீம்’: வரலாறும் பின்னணியும் – ஆதவன் தீட்சண்யா

இந்த சட்டத்திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் போது பேசிய உள்துறை அமித்ஷா,” ஐயா துப்பாக்கிகள் பயங்கரவாதத்தை உருவாக்குவதில்லை. அதனை பரவச் செய்ய மேற்கொள்ளும் பரப்புரையில்தான் அதன் வேர் உள்ளது…மேலும் அது போன்ற தனிநபர்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் என முத்திரையிட்டால், எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் அதற்கு தடை சொல்லமாட்டார்கள் என நினைக்கிறேன்,” என்று கூறினார்.

பெகாசஸ் ஊழல் பருவகால நாடாளுமன்ற கூட்டத் தொடரில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்கட்சிகள் உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கோருகின்றனர். மோடியின் ஆளுங்கட்சி மிருகத்தனமான பெரும்பான்மை இருக்கும் வசதியில், தொடர்வண்டித் துறை மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் அமைச்சராக புதிதாக பதவியேற்றுள்ள அஸ்வினி வைஷ்ணவை நாடாளுமன்றத்தில் அரசின் நிலைப்பாட்டை பாதுகாக்க நியமித்துள்ளது. அவரை அவமானப்படுத்தும் விதமாக அவருடைய எண்ணும் அந்தக் கசிந்தப் பட்டியலில் இருந்தது.
அரசு அதிகாரிகளின் தெளிவற்ற மற்றும் குழப்பமான பல அறிக்கைகளை ஒதுக்கி விட்டாலும், வாங்கியதையும் பயன்படுத்தியதையும் நேரடியாக மறுக்கவில்லை என்பதை நீங்கள் காணமுடியும். என்எஸ்ஓவும் விற்பனையை மறுக்கவில்லை. இந்த உளவுப் பொருளை முறைகேடாகப் பயன்படுத்தி இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்ய பிரான்சைப் போலவே இஸ்ரேல் அரசும் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் இதற்கு செலவழிக்கப்பட்ட பணத்தைப் பின்தொடர்ந்தால் வலுவான தடயம் கிடைத்து விடும். அந்தத் தடயம் நம்மை எங்கே கொண்டு செல்லும்?
இதை கவனியுங்கள். இதில் இரண்டு16 செயற்பாட்டாளர்கள் வழக்கறிஞர்கள், தொழிற்சங்கவாதிகள், பேராசிரியர்கள் மற்றும் அறிவார்ந்தவர்கள் உள்ளனர். அதில் பலரும் பல ஆண்டுகளாக பீமா கோரேகான் வழக்கு என்று அறியப்படும் வழக்கில் சிறையில் இருக்கும் தலித் மக்கள்.

வகுப்புவாதத்தை ஏற்படுத்த வரலாற்றைத் திரிக்கும் வலதுசாரிகள் – மதமாற்ற திருமணங்களும் சில விளக்கங்களும்

2019, ஜனவரி ஒன்றாம் நாள் பீமா கோரேகான் போரின் 200 வது ஆண்டு நிறைவைக் கொண்டாட பல்லாயிரக்கணக்கான தலித்துகள் கூடியிருந்த போது, தலித்துகளுக்கும் முன்னேறிய சாதி குழுக்களுக்கும் இடையே நடந்த வன்முறையை தூண்டிவிட இவர்கள் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள். (கொடுங்கோன்மையான பார்ப்பனர்களின் ஆட்சியாளர்களான பேஷ்வாக்களைத் தோற்கடிக்க தலித் இன வீரர்கள் ஆங்கிலேயருடன் சேர்ந்து போரிட்டனர்) கசிந்துள்ள தரவுத்தளத்தில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 16 பேரில் எட்டு பேரின் தொலைபேசி எண்களும் மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களின் எண்களும் உள்ளன. இந்த அனைவருடைய கைப்பேசியையோ அல்லது அதில் யாராவது சிலருடைய கைப்பேசியையோ வயப்படுத்த முயற்சி செய்யப்பட்டதா அல்லது வயப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை இப்போது கண்டறிய முடியாது. ஏனெனில் அவையாவும் காவல்துறையினரிடம் உள்ளதால் தடயவியல் பரிசோதனைக்குக் கிடைக்கவில்லை.

பல ஆண்டுகளாக நம்மில் சிலர் மோடி அரசின் கரங்கள் தனக்கு எதிரிகளாக கருதுபவர்களைப் பிடிக்க எந்த அளவு நீளும் என்பதை அறியும் அறிஞர்களாக மாறிவிட்டோம். மேலும் இது வெறும் கண்காணிப்பு என்பதை விட அதிகமானது. மச்சாசுசெட்ஸில் உள்ள ‘ஆர்சனல் கன்சல்டிங்’ என்ற எண்ணியல் தடயவியல் நிறுவனத்தின் அறிக்கையை வாஷிங்டன் போஸ்ட் அண்மையில் வெளியிட்டுள்ளது. அது பீமா கோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ரோனா வில்சன் மற்றும் சுரேந்திர காட்லிங் என்ற இருவருடைய கணினிகளில் உள்ள மின்னணு பிரதிகளையும் மின்னஞ்சல்களையும் பரிசோதனை செய்தது. அவர்கள் இருவருடைய கணினிகளும் அடையாளம் தெரியாத வயப்படுத்தும் நபர்களின் ஊடுறுவலுக்கு இலக்காகி உள்ளதையும், அவைகளின் வன்தட்டுக்களில் குற்றத்திற்குரிய ஆவணங்கள் மறைக்கப்பட்டக் கோப்பறைகளில் ஒளித்து வைக்கப்படுள்ளதையும் புலனாய்வாளர்கள் கண்டுபிடித்தனர். அவ்வாறு நுழைக்கப்பட்ட ஆவணங்களில் மயிர்கூச்செறியும் வகையில், மோடியைக் கொல்லும் சதித் திட்டத்தைக் கோடிட்டுக் காட்டும் நகைச்சுவையான கடிதமும் ஒன்று.

https://www.aransei.com/opinion/article/population-growth-for-good-government-will-it-come-curse/

ஆர்சனல் அறிக்கையின் கடுமையான தாக்கங்கள் இந்தியாவின் நீதித்துறையையோ அல்லது அதன் முக்கிய ஊடகங்களையோ நீதிக்காக செயல்படத் தூண்டவில்லை. அதற்கு மிகவும் மாறாக, அதனை மூடி மறைக்க கடுமையாக முயன்றதுடன், அதனால் ஏற்படப் போகும் விளைவுகளில் ஒன்றாக பீமா கோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 84 வயதான இயேசு அவையின் பாதிரியார் ஸ்டான் சுவாமி தனது வாழ்க்கையின் பல பத்தாண்டுகள் ஜார்கண்ட் மாநிலத்தில் தங்கி, அங்கிருந்த பழங்குடி மக்களுடன் இணைந்து கார்பரேட்டுகள் அவர்களுடைய சொந்த நிலத்தை அபகரிப்பதற்கு எதிராக போராடிய ஒரு மனிதர், மிகவும் பரிதாபகரமான நிலையில் சிறையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிறையிலேயே உயிரிழந்த நிகழ்வு இருக்கிறது. அவரைக் கைது செய்தபோது அவருக்கு பக்கவாத நோய் இருந்ததுடன் புற்று நோயுடனும் அவர் போராடிக் கொண்டிருந்தார்.
எனவே, பெகாசசிலிருந்து நாம் என்ன செய்யப் போகிறோம்? ஆள்பவர்கள் ஆண்டவர்களை வழக்கமாக உளவு பார்க்க காலங்காலமாக ஆடும் விளையாட்டின் புதிய தொழில்நுட்ப மறு செய்கை என இழிந்த முறையில் நிராகரிப்பது கடுமையான தவறாகும். இது சாதாரண உளவு அல்ல. நமது கைப்பேசிகள் நமக்கு மிகவும் நெருக்கமானவை. அவை நமது மூளை மற்றும் உடலின் நீட்சியாக ஆகிவிட்டன. கைப்பேசி மூலம் சட்டவிரோதமாக கண்காணிப்பது என்பது இந்தியாவிற்கு புதிது அல்ல. ஒவ்வொரு காஷ்மீரியும் அதை அறிவார். பெரும்பாலான இந்திய செயற்பாட்டாளர்களும் கூடத்தான். எவ்வாறாயினும் அரசாங்கங்களுக்கும், பெரு நிறுவனங்களுக்கும் பணிந்து நமது இடத்தில் அவர்கள் அத்துமீறி நுழைந்து நமது கைப்பேசிகளை எடுத்துச் செல்ல அனுமதி அளிப்பது சட்டமீறலுக்கு நம்மை நாமே சரணடைய செய்து கொள்வதாகும்.

கொரானாவை கையாளாததால் விசாரணைக்கு உள்ளாகும் பிரேசில் அதிபர் – எப்போது மோடி?

பெகாசஸ் செயல் திட்டத்தின் வெளிப்பாடுகள் இந்த உளவுப் பொருளின் சாத்தியமான அச்சுறுத்தல்கள் முந்தைய எந்த வகையான உளவையும் அல்லது கண்காணிப்பையும் விட அதிக அளவு ஆக்கிரமிப்பு செலுத்துவதாக உள்ளது என்பதைக் காட்டுகின்றன. கூகுள், அமேசான் மற்றும் முகநூல் ஆகியவற்றின் நிரல்நெறிமுறைகளை விட அதிகரித்த ஊடுருவல் இது. பயனாளர்களிடையை ஊடுநூலாக ஊடுறுவும் அவற்றில் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்க்கையை வாழ்கிறார்கள். மேலும் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இது ஒரு உளவாளியை உங்கள் சட்டைப்பையில் வைத்திருப்பதை விட ஆபத்தானது. அது உங்கள் வாழ்க்கையின் அன்பை அல்லது மோசமானதைப் பெறுவது போன்றது. உங்கள் மூளை அணுக முடியாத இடைவெளியிலும் உங்களுக்கு அது அறிவிப்பது போன்றதை உள்ளடக்கியது.
பெகாசஸ் போன்ற உளவுப் பொருள்கள் வெறும் அதன் பாதிக்கப்பட்ட பயனாளரை மட்டுமல்ல, அவர்களுடைய நண்பர்கள் குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்கள் ஆகியோர் அடங்கிய முழு சமூக வட்டத்தையும் அரசியல், சமூக பொருளாதார ஆபத்தில் வைக்கிறது.

பொதுமக்களை பரவலாக கண்காணிப்பது குறித்து ஆழமாகவும், நீண்ட காலமாகவும் சிந்தித்தவர் இந்த உலகில் எதிர்கருத்தாளரும் முன்னாள் தேசிய பாதுகாப்பு முகமையின் பகுப்பாய்வாளர் எட்வர்டு ஸ்நோவ்டன்னைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது. அண்மையில் தி கார்டியன் இதழுக்கு அவர் அளித்த நேர்காணலில்,” இந்தத் தொழில்நுட்பத்தை தடுத்து நிறுத்த நீங்கள் எதுவும் செய்யவில்லை என்றால், அது 50,000 பேரை மட்டும் தனது இலக்காக வைத்திருக்காது. அது ஐந்து கோடியாக உயரும். மேலும் அது நாம் எதிர்பார்த்ததை விட அதிக விரைவாக இருக்கும்,” என்று எச்சரித்தார். நாம் அவரது கருத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும். அவர் ஓடுபாதையின் உள் வட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கிறார். அத்துடன் அது ஓடி வந்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

தில்லி கலவரம்: வெற்றுத் தாளில் கையொப்பம் வாங்கிக் கொண்டு 16 மாதங்களாக சிறை வைக்கப்பட்ட இஸ்லாமியர்

நான் 2014 டிசம்பரில், ஸ்நோவ்டன்னை ஏறத்தாழ ஏழாண்டுகளுக்கு முன் மாஸ்கோவில் சந்தித்தேன். அது ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, தனது அரசாங்கத்தின் சொந்த மக்கள் மீதான கண்மூடித்தனமான கண்காணிப்பால் வெறுப்படைந்து முதன் முதலில் அதனை வெளி உலகிற்கு அறிவித்தவராக அவர் மாறிய போது நடந்தது. அவர் 2013, மே மாதம் ஒரு ‘மகத்தான தப்பித்தலை’ செய்து, மெதுவாக நாடு தப்பியவராகவே வாழ்வதை பழக்கமாக்கிக் கொண்டுவிட்டார். டேனியல் எல்ஸ்பர்க்( பென்டகன் பேப்பர்ஸை சேர்ந்தவர்), ஜான் கசாக், (ஜான் கசாக் இதழைப் சேர்ந்தவர்) ஆகியோருடன் நானும் அவரை சந்திக்க மாஸ்கோ சென்றோம். சன்னல் கதவுகளை அழுத்தும் ரஷ்ய குளிரில் ஒரு உணவக அறையில் மூன்று நாட்கள் நாங்கள் கண்காணிப்பு மற்றும் உளவு பார்த்தல் பற்றி உரையாடினோம். இது எதுவரை செல்லும்? இது நம்மை எங்கே கொண்டு செல்லும்? நாம் யாராக மாறுவோம்? என்பது பற்றி பேசினோம்.
பெகாசஸ் செயல்திட்டம் வெளியான போது, நான் அன்று நடந்த உரையாடல் பதிவை மீண்டும் கேட்டேன். அது நூறு பக்கங்களுக்கு இருந்தது. அது என் முடியை முனையில் நிற்க வைத்தது. அப்போது ஸ்நோவ்டன் ஏறக்குறைய தனது 30 வது வயதில் இருந்தார். அப்போதே கடுமையான முன் அனுமானத்துடன் இருந்தார்: ” தொழில்நுட்பத்தைத் திரும்பப் பெற முடியாது. தொழில் நுட்பம் எங்கும் செல்வதில்லை. …. அது மலிவாக கிடைக்கும். அது மிகவும் அதிக திறனுடையதாக இருக்கும். அது எளிதில் கிடைப்பதாக இருக்கும். நாம் எதுவும் செய்யவில்லை என்றால், நாம் அரசின் முழு கண்காணிப்பில் உள்ள தூக்கத்தில் நடப்பவர்களாக வகைப்படுத்தப் படுவோம் அதில் ஒரு உயரடுக்கு அரசு அளவற்ற திறனுடன், அளவற்ற வலிமையைச் செலுத்தி அறிந்து கொள்வது, (அதன் மூலம்) இலக்கின் மீது வலிமையை பயன்படுத்தவது ஆகிய இரண்டையும் நாம் பெற்றிருப்போம். மேலும் இந்தக் கூட்டு மிகவும் அபாயகரமானது…. இது எதிர்காலத்தின் திசைவழி.”
வேறு வார்த்தைகளில் கூறினால், மக்களைப் பற்றி எல்லாவற்றையும் அறிந்த அரசால் நாம் நிர்வகிக்கப்படுவதை நோக்கி நாம் செல்கிறோம். அதே வேளையில் அவர்களைப்பற்றி மக்கள் மிகமிகக் குறைவாகவே அறிந்திருப்பார்கள். அந்த சமச்சீரற்றத் தன்மை ஒரு திசையில் மட்டுமே நம்மை வழிநடத்த முடியும். இது வேகமாகப் பரவக் கூடிய புற்று நோய். அதுவே ஜனநாயகத்தின் முடிவு.

பெருமையோடு திரியும் ஜாமியா துப்பாக்கிச் சூடு நடத்தியவன் – கவலையற்று இருக்கும் காவல்துறை

ஸ்நோவ்டன் கூறியது மிகச்சரியானது. தொழில்நுட்பத்தை திரும்பப் பெற முடியாதுதான். ஆனால் அதனை ஒழுங்கற்ற வழியில், சட்டபூர்வமான தொழிலாக, லாபத்தில் உருண்டோடுவதாக, திறந்த வெளிச் சந்தையில் நாடுகளுக்கிடையே ஓடும் நெடுஞ்சாலையில் காய்க்கவும், பூக்கவும் அனுமதிக்கக் கூடாது. அதற்கெதிராக சட்ட ஒழுங்கு இருக்க வேண்டும். அது மறைமுகமாக இயக்கப்படுவதாக இருக்க வேண்டும். தொழில்நுட்பம் இருக்கலாம், தொழில் தேவையில்லை.

எனவே அது நம்மை எங்கே விட்டுச் செல்லும்? மீண்டும் நல்ல உலகில், பழைய முறை அரசியலுக்கு என்றே நான் கூறுவேன். அரசியல் நடவடிக்கை மட்டுமே இதனை தடுத்து நிறுத்தவோ அல்லது குறைக்கவோ முடியும். ஏனென்றால் அந்த தொழில்நுட்பம், அதைப் பயன்படுத்தும் போது, சட்டபூர்வமாக இல்லாவிட்டால் சட்டவிரோதமாக, தேசியவாதம், முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், காலனிய வாதம், இனவாதம், சாதியம், பாலியல்வாதம் என நமது காலத்தை விவரிக்கும் இந்த சிக்கலான வலைப்பின்னலில் எப்போதும் இருக்கும். தொழில்நுட்பம் எவ்வளவு முன்னேறினாலும் இதுவே நமது போர்க்களமாக இருக்கும்.
நம்முடன் மிக நெருக்கமாக இருக்கும் கைப்பேசி மூலம் நம்மை கட்டுப்படுத்தி நம்மீது ஆதிக்கம் செலுத்தாத உலகத்திற்கு நாம் மீண்டும் இடம்பெயர வேண்டும். எண்ணியல் கண்காணிப்பின் மூச்சுத் திணறல் எல்லைக்கு வெளியே நமது வாழ்கையை, போராட்டங்களை மற்றும் சமூக இயக்கங்களை கட்டி எழுப்ப நாம் முயற்சி செய்ய வேண்டும். நமக்கு எதிராக அவற்றை பயன்படுத்தும் அரசுகளை நாம் அகற்ற வேண்டும். அதிகாரத்தின் நெம்புகோலின் மீதான பிடியைத் தளர்த்தவும். அவர்களால் உடைக்கப்பட்ட அனைத்தையும் சீர்படுத்தவும், அவர்கள் திருடிய அனைத்தையும் மீட்கவும் நம்மாலான அனைத்து வலுவான முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

www.thewire.in இணைய தளத்தில் அருந்ததிராய் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்