இஸ்ரேல் நாட்டுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பெகசிஸ் ஸ்பைவேரை இந்திய அரசு 2017 இல் வாங்கியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, “மோடி அரசின் செயலானது ஜனநாயகத்தை வெட்கக்கேடான முறையில் அபகரிக்கும் செயல்” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா குற்றஞ்சாட்டியுள்ளார்.
தி நியூயார்க் டைம்ஸின் அறிக்கையின்படி, 2017 இல் இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நடைபெற்ற ஒப்பந்தத்தில் பெகசிஸ் ஸ்பைவேர் மற்றும் அதிநவீன ஆயுதங்கள் வாங்க கையெழுத்தாகியுள்ளது. இதன் மதிப்பு ஏறத்தாழ 2 கோடி பில்லியன் டாலர் ஆகும்.
இது குறித்து, நேற்று(ஜனவரி 29), டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, “ஜனநாயகத்தை வெட்கக்கேடான முறையில் அபகரிக்கும் செயல் இது. தேச துரோகச் செயல். 2017 ஆம் ஆண்டில், பிரதமர் மோடியின் பயணத்தின் போது இஸ்ரேலிடம் இருந்து தோராயமாக 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்கள் மற்றும் உளவு சாதனங்கள் உட்பட இராணுவ தொழில்நுட்ப உபகரணங்களுடன் பெகசிஸ் ஸ்பைவேரையும் மோடி அரசாங்கம் வாங்கியுள்ளது” என்று கூறியுள்ளார்.
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், மோடி அரசு இந்திய குடிமக்களை எதிரிகளை போல் பாவித்து போர் ஆயுதத்தைப் பயன்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
“பெகசிஸைப் பயன்படுத்தி சட்ட விரோதமாக உளவு பார்த்தது தேசத் துரோக செயலாகும். யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல, நீதி வழங்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது கூறுகையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உட்பட இந்திய குடிமக்களை உளவு பார்க்க ராணுவ தர ஸ்பைவேரைப் பயன்படுத்திய பாஜக அரசு பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Source: ANI
பெகசிஸ் செயலி குறித்த முழுமையான தகவல்களை தெரிந்துகொள்ள அரண்செய் சிறப்பிதழை (உளவுக்குதிரை) படிக்கவும். இணைப்பு கீழே.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.