Aran Sei

பெகசிஸ் ஒட்டு கேட்பு தொடர்பாக மேற்கு வங்க அரசின் ஆணையம் – விசாரணையை நிறுத்தி வைக்க கோரிய உச்சநீதிமன்றம்

பெகசிஸ் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க அரசு அமைத்திருக்கும் நீதி விசாரணை ஆணையம், விசாரணை தொடங்குவதற்கு முன்பாக காத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி லோகுர் மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தற்காலிக தலைமை நீதிபதி ஜோதிர்மய் பட்டாச்சார்யா அடங்கிய விசாரணை ஆணையத்தின் செயல்பாட்டிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

மேற்கு வங்க அரசு அமைத்த விசாரணைக்கு எதிராக குளோபல் வில்லேஜ் ஃபவுண்டேஷன் பப்ளிக் டிரஸ்ட் என்ற தன்னார்வல அமைப்பு தொடர்ந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா மற்றும் நீதிபதி சூர்யகாந்த் அடங்கிய அமர்வு இதனை தெரிவித்துள்ளது.

பெகசிஸ் விவகாரத்தில் சுதந்திர விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள்மீதான விசாரணையில் அடுத்த வாரம் ஒரு விரிவான உத்தரவைப் பிறப்பிக்க இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

”நாங்கள் மற்ற விசயங்களை விசாரிக்கும்போது, ஒரு கட்டுப்பாட்டை விரும்புகிறோம். தற்போதை பிரச்னை மற்ற பிரச்னைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதற்கு ஒரு தீர்வு வேண்டும். எனவே நியாயமான முறையில், நீங்கள் (மேற்கு வங்க அரசு) காத்திருக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார்.

“இது இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தும்” என நீதிபதி சுரிய காந்த் கூறியுள்ளார்.

Source : The Wire

தொடர்புடைய செய்திகள் : 

பெகசிஸ்க்காக மேற்கு வங்க அரசின் ஆணையத்தை ரத்து செய்ய வலியுறுத்திய ஒன்றிய அரசு – தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பெகசிஸ் வேவு பார்த்ததை ஒப்புக்கொண்ட ஒன்றிய அரசு – ப.சிதம்பரம்

பெகசிஸ் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் – ஆர்.எஸ்.எஸ் முன்னாள் ஊழியர் உச்சநீதிமன்றத்தில் மனு

பெகசிஸ் விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும்; பாதிக்கப்பட்டவர்கள் ஏன் கிரிமினல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை – உச்சநீதிமன்றம் கேள்வி

பெகசிஸ் வேவு பார்க்கப்பட்டவர்கள் பட்டியலில் உச்சநீதிமன்ற அதிகாரிகள் பெயர்கள்  – உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியின் பெயரும் இடம்பெற்றுள்ளது

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்