Aran Sei

பாஜக ஆட்சியில் சத்திஸ்கர் வந்த பெகசிஸ் நிறுவனத்தினர் – முதலமைச்சர் புபேஷ் பாக்ஹேல் தகவல்

த்திஸ்கர் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருந்த போது பெகசிஸ் ஸ்பைவேரை உருவாக்கிய நிறுவனமான இஸ்ரேலின் என்.எஸ்.ஒ  நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் ரகசியத் திட்டத்தோடு அம்மாநிலத்திற்கு வருகைதந்தது குறித்து உறுதிபடுத்தப்பட்ட தகவல் உள்ளது என்று அம்மாநில  முதலமைச்சர் புபேஷ் பாக்ஹேல் கூறியுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், பாஜக அம்மாநிலத்தில் ஆட்சியில் ராமன் சிங் முதலமைச்சராக இருந்தபோது, அவர்கள் இங்கு வந்து சிலரை சந்தித்தனர் என்று அவர் கூறியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெகசிஸ் ஸ்பைவேர்: உச்சநீதிமன்றத்தின் தலைமையில் சுதந்திரமான விசாரணை வேண்டும் – எடிட்டர்ஸ் கில்ட் அமைப்பு

மேலும்,பத்திரிகைக்யாளர்களைச் சந்தித்த அவர் , இந்த விவகாரம் தொடர்பாக அரசின் தலைமையில் குழு அமைத்து, என்.எஸ்.ஒ நிறுவனத்தைச் சார்ந்தவர்கள்   யாரைச் சந்தித்தனர் என்பது குறித்து ஆராய உள்ளதாக அறிவித்துள்ளதாகவும் தி வயர் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, என்.எஸ்.ஒ நிறுவனத்தின் அதிகாரிகள் யாரைச் சந்தித்தார்கள் என்பது குறித்து எங்களிடம் எந்தத் தகவலுமில்லை என்றும் அவர்கள் யாரை சந்தித்தார்கள் என்பது  குறித்து ராமன் சிங் தான் பதிலளிக்க வேண்டும் என்று அம்மாநில  முதலமைச்சர் புபேஷ் பாக்ஹேல்  கூறியுள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

சட்டத்தைக் கொண்டு எளிய மனிதர்களை வதைக்கும் அரசு – செயற்பாட்டாளர் எறேன்றோ லைசோம்பம் நேர்காணல்

மேலும், “இந்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். மிகப்பெரிய அளவில் கண்காணிப்பதற்கு என்ன காரணம்? எவ்வளவு பணம் வழங்கப்பட்டது? எத்தனை ஆண்டுகள் இந்தத் திட்டம்? என்று  அம்மாநில  முதலமைச்சர் புபேஷ் பாக்ஹேல் குறிப்பிட்டுள்ளதாகவும் தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்