Aran Sei

பெகசிஸ் ஸ்பைவேர்: நீதித்துறை கண்காணிப்பில் விசாரணை வேண்டும் – சிபிஎம் மாநிலங்களவை உறுப்பினர் உச்சநீதிமன்றத்தில் மனு

பெகசிஸ் ஸ்பைவேர் வழியாக கண்காணிக்கப்பட்டது தொடர்பாக   நீதித்துறை கண்காணிப்பின்  கீழ்  விசாரணை நடத்த வேண்டுமென  மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியைச் சார்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ்  உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி  வெளியிட்டுள்ளது.

டெல்லியில் தகர்க்கப்பட்ட கிறிஸ்தவ ஆலயமும் இந்தியக் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களும் – அ.மார்க்ஸ்

இதுகுறித்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த ஜூலை 19 அன்று தி வயர் செய்திதளத்தில்  வெளியிடப்பட்ட இந்த பெகசிஸ் குற்றச்சாட்டு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவின் மூலமாக உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிடவேண்டுமெனக் கோரியுள்ளதாகவும் அந்த  செய்தி  குறிப்பிடுகிறது.

மேலும், இதே போன்றதொரு மனு இதற்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்டிருந்ததாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

இந்நிலையில்,உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், “அம்நெஸ்ட்டி இன்டர்நேஷனல் செக்யூரிட்டி ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 10 இந்தியர்களின் தொலைபேசிகள் கண்காணிக்கப்பட்டுள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, 5 பத்திரிகையாளர்களின் தொலைபேசியும் கண்காணிக்கப்பட்டுள்ளது” என்று  குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபரின் ஜாமீன் மனு தள்ளுபடி – கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு

மேலும், “பெகசிஸ்  ஸ்பைவேர் வழியாக கண்காணிக்கப்பட்டது  இருவகையில் இந்திய அரசு அல்லது வெளிநாட்டு நிறுவனம் நடத்தப்பட்டிருக்கலாம்.  ஒருவேளை இதை இந்திய அரசு நடத்தி இருந்தால் முறையற்ற வழியில் நடைபெற்றுள்ளது. ஆளும் கட்சியின் தனிப்பட்ட மற்றும் அரசியல் நலன்களுக்காக இறையாண்மை அவமதிக்கப்படுவது அனுமதிக்க முடியாது” என்று  அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்  செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, “ஒருவேளை வெளிநாட்டு நிறுவனம் நடத்தியிருந்தால், இது வெளிப்புற ஆக்கிரமிப்பு. எனவே, இதையும் மிகமுக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்” எனவும் அந்த மனுவில்  கூறியுள்ளதாக அந்த செய்தி  குறிப்பிடுகிறது 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்