Aran Sei

பெகசிஸ் தாக்குதல்  இந்திய ஒன்றிய அரசின் ஒப்புதலின்றி நடந்தேறி இருக்க முடியாது – சிவ சேனா குற்றச்சாட்டு

பெகசிஸ் தாக்குதல்  இந்திய ஒன்றிய அரசின் ஒப்புதலின்றி நடந்தேறி இருக்க முடியாதென சிவ சேனாக் கட்சி தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், பெகசிஸ் தாக்குதல் அவசர நிலைக் காலக்கட்டத்தை விட மிகவும் அபாயகரமானது  என்றும் பெகசசின் உளவுக்கு  உண்மையான காரணமானவர்கள் இந்தியாவில் தான் இருக்கிறார்கள். அவர்களைக் கண்டறியவேண்டுமென சிவ சேனாக் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாமானா பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக  அந்த செய்தி கூறுகிறது.

‘பெகசிஸ் விவகாரத்தில் நீதி விசாரணை வேண்டும்’ – டெல்லி பாஜக தலைமையகத்திற்கு முன் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

மேலும், உச்சநீதி மன்றம் தன்னிச்சையாக இது குறித்து விசாரிக்க வேண்டும். தேசத்தின் விருப்பம் இதில் இடம்பெற்றிருக்கிறது என்றும் அந்த பத்திரிக்கையில் கூறியுள்ளதாகவும்  தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சாமானா பத்திரிக்கையில் வெளியாகியுள்ள செய்தியில்,”குறிப்பிட்ட சில இந்தியர்களைக் குறிவைத்து பெகசிஸ் கண்காணிப்பு  நடந்திருப்பது  இந்திய ஒன்றிய அரசின் ஒப்புதலின்றி நடந்தேறி இருக்க முடியாது.  இந்த  பெகசிஸ் விவகாரத்தில் யார் பொறுப்பு எடுத்துக்கொள்ளப் போகிறார்கள்? கூட்டு நாடாளுமன்ற குழு அமைத்து இதை விசாரிக்க வேண்டும் ” என்றும் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

பெகசிஸ் ஸ்பைவேர்: தேச பாதுகப்பில் நிகழ்ந்த வன்முறை

மேலும், சிவ சேனா கட்சியின் தலைவர்கள் இதுகுறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கடிதம் அளித்துள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்