இஸ்ரேலிடமிருந்த பெகசிஸ் உளவு செயலியை இந்தியா வாங்கியதை அம்பலப்படுத்திய தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையை ’சுப்பாரி மீடியா’ (கூலிக்கு வேலை செய்யும் மீடியா) என்று ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங் விமர்சித்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு, பிரதமர் நரேந்திரமோடி முதல் முறையாக இஸ்ரேலுக்கு சென்றிருந்தபோது, இஸ்ரேலின் அப்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் நரேந்திர மோடிக்கு இடையே கையெழுத்தான 2 பில்லியன் டாலர் பாதுகாப்பு உபகரணம் தொடர்பான ஒப்பந்தத்தில், பெகசிஸ் உளவு செயலியும் இடம்பெற்றிருந்ததாக தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
சுமார் ஓராண்டாக நடத்திய ஆய்வில், பெகசிஸ் செயலியை பயன்படுத்தி, சில நாடுகளை தனக்கு ஆதரவாக இஸ்ரேல் பணியச்செய்திருப்தாகவும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
அந்தவகையில், சர்வதே அரங்கில் இஸ்ரேலுக்கு எதிரான நிலைபாட்டை வைத்திருந்த மெக்சிகோ மற்றும் பனாமா நாடுகள் திடீரென்று இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைபாட் எடுத்தை சுட்டிக்காட்டியுள்ள தி நியூயார்க் டைம்ஸ், பெகசிஸ் செயலியை இஸ்ரேல் அரசு அந்த நாடுகளுக்கு வழங்கியதே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறியுள்ளது.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இஸ்ரேலுக்கு சென்ற முதல் பிரதமர் நரேந்திர மோடி. 2017 ஆம் ஆண்டு பிரதமர் மேற்கொண்ட அந்த பயணத்தின்போது பெசிஸ் உளவு செயலி வாங்கப்பட்டது என்று தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
பெகசிஸ் விவகாரம் குறித்துப் பேசிய ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங் ” நீங்கள் தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையை நம்புகிறீர்களா?. அது ஒரு ’சுப்பாரி மீடியா’ (கூலிக்கு வேலை செய்யும் மீடியா) என்று விமர்சித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.