Aran Sei

பெகாசிஸ் மென்பொருளை பயன்படுத்தினாரா சந்திரபாபு நாயுடு? – விசாரணை மேற்கொள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கோரிக்கை

Credit: Puthiyathalaimurai

ந்திர மாநிலத்தின் முதலமைச்சராக (2014-19) சந்திரபாபு நாயுடு இருந்த போது பெகாசிஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தினாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியுள்ள குடிவாடா அமர்நாத், “ஆந்திராவின் முதலமைச்சராக (2014-2019) சந்திரபாபு நாயுடு இருந்த காலத்தில், பெகாசிஸ் மென்பொருளை பயன்படுத்தினாரா என்று ஒன்றிய அரசு விசாரிக்க வேண்டும்என்று கூறியுள்ளார்.

பெகாசிஸ் உளவு மென்பொருளை சந்திரபாபு நாயுடு வாங்கினார் என்றால், அது அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களுக்கு எதிராக பயன்படுத்த வாங்கப்பட்டதா என்பதை ஒன்றிய, மாநில அரசுகள் விசாரிக்க வேண்டும். இது சாதாரண விசயம் அல்ல, இந்த விவகாரத்தில் முழு விசாரனை நடத்த வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்என்று தெரிவித்துள்ளார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டை தெலுங்கு தேசம் கட்சி மறுத்துள்ளது, “நாங்கள் எந்த உளவு மென்பொருளையும் வாங்கவில்லை. சட்டவிரோத தொலைப்பேசி ஒட்டுக்கேட்பில் நாங்கள் ஈடுபடவில்லைஎன அக்கட்சியின் சார்பில் வெளியிட்டப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • முன்னதாக, இரு தினங்களுக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு ஆட்சிக் காலத்தில் பெகாசிஸ் மென்பொருள் பயன்படுத்தினார் என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளரும் சந்திரபாபு நாயுடுவின்  மகனுமாகிய நாரா லோகேஷ், “மம்தா உண்மையில் இவ்வாறு சொன்னாரா?. அவர் எங்கு, எந்த சூழ்நிலையில் சொல்லியிருக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், இது முற்றிலும் தவறான தகவல்தான்என்று கூறியுள்ளார்.

Source: Puthiyathalaimurai.com

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்