Aran Sei

ஜம்மு காஷ்மீர் எல்லை நிர்ணய ஆணையத்தின் கூட்டம் – முடிவு ஏற்கனவே திட்டமிட்டது எனக் கூறி மக்கள் ஜனநாயகக் கட்சி புறக்கணிப்பு

ம்மு காஷ்மீர் எல்லை நிர்ணய ஆணைய கூட்டத்தின் முடிவு முன்கூட்டியே திட்டமிடப்பட்டுவிட்டதால், கூட்டத்தைப் புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக மெஹபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தெரிவித்துள்ளது.

”முடிவு முன்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ளது. இது ஜம்மு காஷ்மீர் மக்களின் அரசியல் அதிகாரமற்ற தன்மை மேலும் வழிவகுக்கும் மற்றும் ஒரு அரசியல் கட்சியின் அரசியல் பார்வையை நனவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது” என அவர் குற்றம் சாட்டியுள்ளனர்.

‘வெட்கமில்லாத பிரதமர் கொரோனாவில் இருந்து நாட்டை காக்க தவறிவிட்டார்’ – மம்தா பானர்ஜி விமர்சனம்

இது தொடர்பாக ஆணையத்தின் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய்க்கு பிடிபி கட்சியின் பொதுச் செயலாளர் குலாம் நபி லோன் ஹஞ்சுரா எழுதியிருக்கும் கடிதத்தில், ”ஆணையக்குழுவில், அரசியலமைப்பு மற்றும் சட்டரீதியான ஆணைகள் இல்லை என்பதுடன், ஆணையத்தின் இருப்பு மற்றும் நோக்கங்கள், ஜம்முவின் ஒவ்வொரு குடிமக்களுக்கும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது என்று நாங்கள் கருதுகிறோம்” என அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும், “ஜம்மு காஷ்மீர் மக்களை அரசியல் அதிகாரமற்றவர்களாக மாற்றும் ஒன்றிய அரசின் ஒட்டு மொத்த செயல்முறையின் ஒரு பகுதியாக இது இருக்கும் என்ற அச்சம் உள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘ஸ்டான் சாமியை பொய் வழக்கால் சிறையிலடைத்து வருத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்’ – குடியரசுத் தலைவருக்கு எதிர்கட்சிகள் கடிதம்

”நாடு முழுவதும் எல்லை நிர்ணய செயல்முறை 2026 ஆம் ஆண்டுவரை நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு மற்றும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீரில் உள்ள ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் அரசியல் பார்வையை நனவாக்குவதை நோக்கமாகக் கொண்டதாக இந்த செயல்முறை உள்ளது என்ற அச்சம் உள்ளது, மற்ற விசயங்களை போலவே, இதிலும் ஜம்மு காஷ்மீர் மக்களின் கருத்துக்கள் மற்றும் விருப்பங்களுக்குக் குறைவான மதிப்பே கொடுக்கப்படும்” என அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

எல்லை நிர்ணய செயல்முறையின் முடிவு முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக பரவலாக நம்பபடுகிறது. இது எங்கள் மக்களின் நலன்களை மேலும் பாதிக்கக்கூடும் எனக் கூறிய ஹஞ்சுரா, ”மேலே குறிப்பிட்டுள்ள உண்மைகள் மற்றும் பிரச்னைகளை கருத்தில் கொண்டு, எல்லை நிர்ணய செயல்முறையில் இருந்து பிடிபி கட்சி விலகி இருக்க விரும்புகிறது. சில பயிற்சியின் ஒரு பகுதியாக இருக்க கூடாது என கட்சி விரும்புகிறது” என அவர் தெரிவித்தார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்