ஸ்ரீநகரின் ராம்பாக் பகுதியில் காவல்துறை நடத்திய என்கவுண்டரில், மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டதில், அதிகாரப்பூர்வ தகவல்களின் நம்பகத்தன்மை சட்டபூர்வமான சந்தேகத்தை எழுப்புவதாக ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நவம்பர் 15 ஆம் தேதி ஸ்ரீநகரின் ஹைதர்போரா பகுதியில் காவல்துறையும் ராணுவமும் இணைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட நான்கு பேரின் உடலையும் காவல்துறையினர் ஹைதர்பூரா பகுதியிலேயே புதைத்துவிட்டனர். உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று காவல்துறை தரப்பில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
காஷ்மீரில் 4 பேர் சுட்டுக்கொலை; உறவினர்கள் போராட்டம் – மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு அரசு உத்தரவு
இரண்டு பேரின் உடல்களை மட்டும் தற்போது உறவினர்களிடம் காவல்துறை ஒப்படைத்தது. இதற்கிடையில், ஹைதர்போரா துப்பாக்கிச் சூடு தொடர்பாக, மாவட்ட நீதிபதி விசாரணைக்கு காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று(நவம்பர் 24), ஸ்ரீநகரில் ராம்பாக் பகுதியில், பொதுமக்கள் படுகொலைகளில் ஈடுபட்டதாக தேடப்பட்டு வந்த தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எஃப்) என்ற அமைப்பின் தளபதி உட்பட மூன்று பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதைத்தொடர்ந்து, இன்று(நவம்பர் 25), மெகபூபா முப்தி தனது டிவிட்டர் பக்கத்தில், “நேற்று நடந்த ராம்பாக் என்கவுண்டரின் நம்பகத்தன்மையின் மீது சட்டரீதியாப சந்தேகங்கள் எழுகின்றன. கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் மற்றும் சாட்சிகளின்படி, துப்பாக்கி சூடு ஒரு பக்கத்தில் இருந்து மட்டும்தான் நடந்ததாக தெரிகிறது” என்று தெரிவித்துள்ளார்.
After yesterday’s alleged encounter at Rambagh legitimate doubts are looming over its authenticity. As per reports & witnesses it seems that the firing was one sided.Again the official version far from truth is not in line with ground realities as seen in Shopian, HMT & Hyderpora pic.twitter.com/S9O6TGSGRH
— Mehbooba Mufti (@MehboobaMufti) November 25, 2021
“அப்பாவிகள் ரத்தம் சிந்துவது நிறுத்தப்பட வேண்டும்” – காஷ்மீர் பேரணியில் முழக்கம்
மீண்டும் அதிகாரப்பூர்வமான தகவல்கள், உண்மைக்குப் புறம்பாகவும், கள நிலவரத்தோடு ஒத்துப்போகாமலும், சோபியான், எச்எம்டி மற்றும் ஹைதர்போராவில் நடந்ததைப் போலவே உள்ளது என்று ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் மெகபூபா முப்தி குறிப்பிட்டுள்ளார்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.