Aran Sei

மீண்டும் வீட்டுக் காவலில் மெகபூபா முப்தி – மனிதாபிமானமற்ற செயற்களின் புதிய ஆழங்களை ஒன்றிய அரசு தொட்டுள்ளதாக குற்றச்சாட்டு

Image Credits: The Print

தான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும், அதே நேரத்தில் அவரது கட்சி தலைவர்கள் இருவரை காவல்துறை கைது செய்துள்ளது என்று ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

அவரது கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சுஹைல் புகாரி மற்றும் செய்தி தொடர்பாளர் நஜ்மு சாகிப் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, இன்று(நவம்பர் 18), தனது ட்விட்டர் பக்கத்தில் மெகபூபா முப்தி, மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன் என்றும்  சுஹைல் புகாரி,  நஜ்மு சாகிப் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

ஹைடர்போரா என்கவுண்டரைப் பற்றி குறிப்பிடுகையில், “அப்பாவி பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதன் வழியாகவும் அவர்களை கண்ணியமான முறையில் அடக்கம் செய்வதற்கான உரிமையை அவர்களின் குடும்பங்களுக்கு மறுப்பதன் வழியாகவும் மனிதாபிமானமற்ற செயற்களின் புதிய ஆழங்களை ஒன்றிய அரசு தொட்டுள்ளது” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“ஆரம்பத்தில் இருந்தே அவர்கள் தங்களுடைய பொறுப்புகளில் இருந்து தப்பிக்க பொய்களைக் கொண்ட கதைகளையே சொல்லி வந்தார்கள்.  தங்கள் செயல்களுக்கு பொறுப்பேற்க அவர்கள் விரும்பவில்லை. அதனால்தான் அவர்கள் அநீதிகளுக்கும் அட்டூழியங்களுக்கும் எதிரான இத்தகைய குரல்களை வேறு முகமூடி இட்டு மறைக்கிறார்கள்” என்று மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

நவம்பர் 15 ஆம் தேதி, ஸ்ரீநகரில் உள்ள ஹைதர்போராவில் நடந்த என்கவுண்டர், அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்புகளை எழுப்பியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் ஹைதர்போரா என்கவுன்டர் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்