Aran Sei

‘டெல்லியில் இருப்பவர்கள் காஷ்மீரை ஒரு ஆய்வகத்தைபோல பயன்படுத்தி பரிசோதனைகள் செய்கிறார்கள்’ – மெஹபூபா முப்தி குற்றச்சாட்டு

credits : reuters

டெல்லியில் உள்ளவர்கள் ஜம்மு – காஷ்மீர் பிராந்தியத்தை ஒரு ஆய்வகம்போல பயன்படுத்தி இங்குப் பரிசோதனைகள் செய்கிறார்கள் என்று ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயக கட்சியின் (பிடிபி) தலைவருமான மெஹபூபா முப்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேற்று (செப்டம்பர் 21), ஜம்முவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மெஹபூபா முப்தி, நாடு முழுவதும் உள்ள சாலைகள், ரயில் நிலையங்களின் பெயர்களை மாற்றியதற்காக பாஜக தலைமையிலான ஒன்றிய அரசை விமர்சித்துள்ளார்.

“எல்லை நிர்ணயப் பணிகள் தாந்தோன்றித்தனமாக செய்யப்படுகிறது. ஒன்றிய அரசு பெயர்களை மட்டும் மாற்றுகிறது. ஆனால், அதனால் குழந்தைகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காது. ஒன்றிய அரசு தலிபான்கள் குறித்தும், ஆப்கானிஸ்தான் குறித்து பேசுகிறது. ஆனால், விவசாயிகள், வேலையின்மை மற்றும் ஊழல் குறித்து பேசுவதே இல்லை.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவை கொண்டாடிய பாஜக : துக்க தினமென மெஹபூபா முக்தி போராட்டம்

“டெல்லியில் உள்ளவர்கள் ஜம்மு–காஷ்மீர் பிராந்தியத்தை ஒரு ஆய்வகம்போல பயன்படுத்தி இங்குப் பரிசோதனைகள் செய்கிறார்கள். முன்னாள் பிரதமர்களான ஜவஹர்லால் நேரு மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் போன்ற தலைவர்களுக்கு ஜம்மு-காஷ்மீர் குறித்து ஒரு பார்வை இருந்தது. மக்களை பிரித்து தங்கள் வாக்கு வங்கியை அதிகரிப்பதே அவர்களின் பார்வையாக இருந்தது. பிரித்தாள்வதே அவர்களின் கொள்கை.” என்று மெஹபூபா முப்தி விமர்சித்துள்ளார்.

“ஒன்றிய அரசை பொறுத்த வரை, சர்தார்கள் எல்லோரும் தற்போது காலிஸ்தானியர்கள். நாங்கள் (காஷ்மீரிகள்) பாகிஸ்தானியர்கள். உண்மையில், பாஜகவினர் மட்டுமே இந்துஸ்தானியர்கள் இல்லை.” என்று அவர்  குறிப்பிட்டுள்ளார்.

வலி பொறுக்க முடியாமல் அழக்கூட உரிமை இல்லையா? – ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து மெஹபூபா முப்தி

“தற்போதைய ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில்  வேலையின்மை விகிதம் 18 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இதன் வழியாக நாட்டின் அதிகப்பட்ச வேலையின்மை உள்ள பிராந்தியாக மாறியுள்ளது . ஒன்றிய அரசு ஜம்மு-காஷ்மீரின் பொருளாதாரத்தை பின்னுக்கிழுத்து வருகிறது. எங்கள் பொருளாதாரம் எதிர்காலத்தில் ஹரியானாவையும் பஞ்சாப்பையும் சார்ந்திருக்க நேரலாம்.” என்று மெஹபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

Source: ANI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்