Aran Sei

‘பாஜகவுக்கு எதிராகன தேசிய கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றாலும், கூட்டுத் தலைமையே இருக்கும்’ – சரத் பவார்

Image Credits: DNA India

ந்த வார தொடக்கத்தில் தனது இல்லத்தில் தான் நடத்திய எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் தேசியளவிலான கூட்டணியை உருவாக்குவது குறித்து விவாதிக்கவில்லை என்றும், ஆனால் அத்தகைய கூட்டணி உருவாக்கப்படுமானால், அதற்கு கூட்டு தலைமைதான் வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

ஜூன் 22 ஆம் தேதி,  புது தில்லியில் உள்ள சரத் பவாரின் இல்லத்தில் நடந்த கூட்டத்தில், யஷ்வந்த் சின்ஹா, பவன் வர்மா, சஞ்சய் சிங், டி ராஜா, பாரூக் அப்துல்லா, நீதிபதி ஏ.பி.சிங், ஜாவேத் அக்தர், கே.டி.எஸ் துளசி, எஸ்.ஒய் குரேஷி (முன்னாள் சி.இ.சி), கொலின் கோன்சால்வ்ஸ், பொருளாதார நிபுணர் அருண்குமார், கன்ஷ்யம் திவாரி மற்றும் பிரிதிஷ் நந்தி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

பாஜகவிற்கு எதிராக கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ள இந்நேரத்தில் சரத் பவாரின் இந்த முன்னெடுப்பு கவனம் பெற்றது.

சரத் பவார் தலைமையில் இன்று தேசிய தலைவர்கள் கூட்டம்: பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி உருவாகிறதா?

இந்நிலையில், நேற்று (ஜூன் 25), இதுகுறித்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய சரத் பவார், “தற்போது, ​​ டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போராட்டம் அரசியல் சார்பற்றது. ஆனாலும், இது விவசாயத்துடன் தொடர்புடையது என்பதால், அவர்களுக்கு நாங்கள் ஆதரவளிக்க முடியும். இக்கூட்டத்தின் நோக்கம், நாடாளுமன்றத்தில் பிரச்சினைகளை எழுப்புவதன் வழியாகவும், ஒன்றிய அரசுக்கு பரிந்துரைகளை வழங்குவதன் வழியாகவும், விவசாயிகளுக்கு எவ்வாறு நாங்கள் உதவ முடியும் என்பது குறித்ததுதான்.” என்று தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கு எதிரான தேசியளவிலான கூட்டணியின் குறித்தும், அதில் காங்கிரஸின் இடம் என்னவாக இருக்கும் என்பது குறித்தும் எழுப்பப்பட்டுள்ள கேள்விக்கு, “என்னுடைய பார்வையில் அவ்வாறு கூட்டணி உருவாகும்பட்சத்தில் காங்கிரஸ் கட்சியையும் உடன் சேர்க்க வேண்டியிருக்கும். இதையே நான் கூட்டத்திலும் சொன்னேன்.” என்று அவர் கூறியுள்ளார்.

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி – இந்திய அளவில் ஒருக்கிணைக்கும் தேசியவாத காங்கிரஸ்

காங்கிரஸும் இடம்பெறுமானால், அக்கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சரத் பவார், “எனது கருத்தின்படி, அக்கூட்டணிக்கு கூட்டுத் தலைமைதான் இருக்க வேண்டும். இதை மனதில் வைத்துக்கொண்டுதான் நாம் இவ்விஷயத்தின் முன்னகர வேண்டும்.” என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் குறிப்பிட்டுள்ளார்.

Source; pti

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்