Aran Sei

கொரோனில் சர்ச்சை: இந்திய மருத்துவ சங்கம் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது: பதஞ்சலி குற்றச்சாட்டு

ந்திய மருத்துவ சங்கம், ”சில குறிப்பிட்ட காரப்பரேட் நிறுவனங்களின் சந்தை லாபத்திற்காக ஆயுர்வேதத்திற்கு களங்கம் கற்பித்து, மனிதகுலத்திற்கு பேரழிவை உண்டாக்க வேண்டாம்” என பதஞ்சலியின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம், கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக தயாரித்துள்ள கொரோனில் மருந்துக்கு, உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின் படி, கொரோனா தடுப்பு மருந்து என்ற அங்கீகாரத்தை, மத்திய ஆயுஷ் அமைச்சகம் வழங்கியிருப்பதாக அறிவித்தது.

கடந்த பிப்பிரவரி 19 ஆம் தேதி டெல்லியில், மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன், சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் தலைமை தாங்கிய நிகழ்ச்சியில், கொரோனில் மருந்து அறிமுகம் செய்யப்பட்டது.

 

பதஞ்சலி மருந்து குறித்து ஹர்ஷவர்தன் விளக்கமளிக்க வேண்டும் – இந்திய மருத்துவர்கள் சங்கம்

இதைத்தொடர்ந்து, “உலக சுகாதார அமைப்பின் வழிக்காட்டுதல்களின் படி, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் ஆயுஷ் பிரிவிலிருந்து, அங்கீகரிக்கப்பட்ட மருந்து என்பதற்கான சான்றிதழை (CPP) கொரோனில் பெற்றுள்ளது.” என்று பதஞ்சலி தனது அறிக்கையில் தெரிவித்தது.

கொரோனா பெயரால் ரூ.241 கோடி குவித்த பாபா ராம்தேவ் – நவநீத கண்ணன்

2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம், கொரோனாவிற்கான ஆயுர்வேத முறையிலான மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கிய பதஞ்சலி நிறுவனம், கொரோனில் மருந்தை தயாரித்தது. ஜூன் 23 ஆம் தேதி, கொரோனா தொற்றுப் பரவல் உலகம் முழுதும் உச்சத்தில் இருந்தபோது, ஆயுர்வேத முறையில் தயாரிக்கப்பட்ட கொரோனில் மருந்தை பதஞ்சலி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அறிவியல் பூர்வமாக இம்மருந்து சோதிக்கப்பட்டு நிரூபிக்கப்படவில்லை என்று அதற்கு எதிராக அப்போதே பலத்த எதிர்ப்புகள் எழுந்தன.

கொரோனாவிற்கு எதிராக பதாஞ்சலியின் கொரோனில் மருந்து – அங்கீகாரம் வழங்கிய ஆயுஷ் அமைச்சகம்

இதைத்தொடர்ந்து, கொரோனில் மருந்தை, ‘எதிர்ப்புச் சக்தியைக் கூட்டும்’ மருந்து மட்டும்தான் என்று, ஆயுஷ் அமைச்சகம் அறிவித்தது.

 

பதஞ்சலி கொரோனில் தடுப்பு மருந்து : நாங்கள் அங்கீகாரம் கொடுக்கவில்லை – உலக சுகாதார அமைப்பு

கொரோனில் மருந்தின் நம்பகத்தன்மையை பலர் கேள்வியெழுப்பிய போதிலும், உலக சுகாதார அமைப்பே தற்போது அங்கீகாரம் அளித்துள்ளதாக கூறியிருந்த பாபா ராம்தேவ், உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த குழு ஒன்று, பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தை ஆய்வு செய்து, கொரோனில் மருந்தை 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் உரிமத்தை வழங்கியதாகவும் கூறியிருந்தார்.

ஆனால், ”பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் மருந்தை தாங்கள் ஆய்வு செய்யவோ, அங்கீகாரம் கொடுக்கவோ இல்லை” என பிப்ரவரி 19ஆம் தேதி, உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.

மயக்க மருந்தே இல்லாத ஆயுர்வேத முறையில் அறுவை சிகிச்சை சாத்தியமா?

இதையடுத்து, கொரோனாவை குணப்படுத்தும் மருந்தாக பதஞ்சலியின் கொரோனில் மருந்தை விளம்பரப்படுத்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், இதுகுறித்து விளக்கம் தர வேண்டும் என,  இந்திய மருத்துவ சங்கம் (IMA) கோரிக்கை விடுத்தது.

ஒருங்கிணைந்த மருத்துவ முறைக்கு அனுமதியளித்த மத்திய அரசு: எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவர் சங்கம் போராட்டம்

மேலும், “நாட்டின் சுகாதார அமைச்சராக இருப்பவர், இது போன்ற பொய்யான புனையப்பட்ட அறிவியலற்ற தயாரிப்பை நாட்டு மக்களுக்கு வெளியிடுவது எந்த வகையில் நியாயம்?” என்று இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் ஜெயலால் கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள பதஞ்சலியின் செய்தி தொடர்பாளர், திஜரவாலா, ”இந்திய மருத்துவ சங்கத்துக்கு உண்மையை ஏற்றுக்கொள்வதில் சிக்கல்கள் உள்ளது. மருத்துவத் தொழிலில் தவறான தகவல் மற்றும் கமிஷனின் பரவலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் கவனம் செலுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என்று கூறியுள்ளார்.

மேலும், ”ஆதாரம் இல்லை என்றால் எதுவும் இல்லை என அர்த்தம் இல்லை. அந்த நிகழ்வுகள் முடிந்து விட்டன. 500 கோடி முதலீட்டையும் 300 விஞ்ஞானிகளையும் கொண்ட பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனம், உலகின் மொத்த ஆரோக்கியத்திற்கான ஆராய்ச்சி மற்றும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட ஆயுர்வேத மருந்துகளை வழங்க அர்ப்பணிக்கப்பட்டுள்ளது” என திஜரவாலா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

ஆயுர்வேத மருத்துவர்கள் தேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் – மத்திய ஆயுஷ் அமைச்சர் கருத்து

”சில குறிப்பிட்ட காரப்பரேட் நிறுவனங்களின் சந்தை லாபத்திற்காக, ஆயுர்வேதத்திற்கு களங்கம் கற்பித்து, மனிதகுலத்திற்கு பேரழிவை உண்டாக்க வேண்டாம்” என பதஞ்சலியின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்