கொரோனா தொற்று உதவிக்காக பிஎம் கேர்ஸ் திட்டத்திற்கு நிதி உதவியளிக்க இருப்பதாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரருமான பேட் கம்மின்ஸ் தெரிவித்திருந்தார்.
பேட் கம்மின்ஸின் இந்த முடிவு சமூக வலைதளங்களில் அதிகமா பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது தனது முடிவை மாற்றி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பேட் கம்மின்ஸ், ”இறுதியாக, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் யூனிசெப் அமைப்பு இணைந்து திரட்டும் நிதி திட்டத்திற்கு அளித்துள்ளேன். உங்களால் முடிந்தால் நீங்களும் உதவலாம்” என கூறி அதற்கான இணையதளத்தையும் பகிர்ந்துள்ளார்.
Terrific work @CricketAus
FYI I ended up allocating my donation to UNICEF Australia's India COVID-19 Crisis Appeal.
If you're able to, please join many others in supporting this here https://t.co/SUvGjlGRm8 https://t.co/1c0NE9PFdO
— Pat Cummins (@patcummins30) May 3, 2021
இந்தியாவின் கொரோனா நெருக்கடிக்காக உதவ முன்வந்திருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், பேட் கம்மின்ஸ் அளித்த நிதியுடன் சேர்த்து இதுவரை 73,000 டாலர்கள் வரை நிதி திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.