Aran Sei

நவராத்திரியில் கறிக் கடைக்கு தடை விதித்த டெல்லி மேயர் – நாடு முழுதும் தடைவிதிக்க பாஜக எம்.பி., வேண்டுகோள்

வராத்திரியின் போது இறைச்சி கடைகளுக்கு தடை விதித்து டெல்லி மேயர்கள் இரண்டு பேர் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், “இதை வரவேற்கிறேன். இந்த தடையை நாடு முழுவதும் நீட்டிக்க வேண்டும்” என்று பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா தெரிவித்துள்ளார்.

நேற்று முன் தினம் (ஏப்ரல் 4), இறைச்சிக் கடைகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக தெற்கு டெல்லி மாநகராட்சி மேயர் முகேஷ் சூர்யன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

அப்போது , “துர்கா தேவியை வணங்கும் நவராத்திரியின் புனிதமான நாட்களில் நமது மாநகரட்சியின் கீழ் உள்ள இறைச்சிக் கடைகளை மூட வேண்டும். மேலும், இந்த ஒன்பது நாட்களிலும் பக்தர்கள் இறைச்சி, வெங்காயம் மற்றும் பூண்டு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று அவர் கூறியிருந்தார்.

உத்தரப் பிரதேசம்: சைவ பிரியாணி விற்ற இஸ்லாமியரை தாக்கிய இந்துத்துவாவினர் – இஸ்லாமிய வெறுப்பே காரணமென பத்திரிகையாளர் கருத்து

இது குறித்து, பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா நேற்று (ஏப்ரல் 5) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, “தெற்கு டெல்லி மாநகராட்சி எடுத்த முடிவை நான் வரவேற்கிறேன். இதை மூன்று மாநகராட்சிகளும் செயல்படுத்த வேண்டும் என நான் விரும்புகிறேன். மேலும், டெல்லி தேசிய தலைநகர் பகுதியிலும் (என்சிஆர்) நாடு முழுவதிலும் இதை செயல்படுத்த வேண்டும் என நான் விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

இஸ்லாமியர்கள் எந்த சர்ச்சையிலும் வர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முடிவை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா, “ஒவ்வொரு மதத்தையும் மதிக்க வேண்டும் என நமது பண்பாடு கூறுகிறது. மோடி அரசின் திட்டங்கள் எல்லா மதத்திற்குமானது” என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நவராத்திரியின் போது கறிக்கடைக்கு தடை – அரசியல் சட்டத்திற்கு எதிரானதென மெஹுவா மொய்த்ரா விமர்சனம்

கிழக்கு டெல்லி மாநகராட்சி மேயரும் இதே போன்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக, வடக்கு டெல்லி மாநகராட்சியில் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை.

Source: NDTV

குற்றவியல் நடைமுறை அடையாள சட்டத்திற்கு எதிராக மக்களவையில் கர்ஜித்த மௌவா மொய்த்ரி எம்.பி.,

கூடுதல் தகவல்களுக்கு க்ளிக் செய்யவும்…

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்