Aran Sei

வைரமுத்துவுக்கு விருது வழங்குவது ஒஎன்விக்கு செய்யும் உச்சகட்ட அவமரியாதை : திரைக்கலைஞர் பார்வதி கண்டனம்

கவிஞர் வைரமுத்துவுக்கு ஒன்வி விருது வழங்கக் கூடாது என நடிகை பார்வதி போர்க்கொடியை உயர்த்தியுள்ளார்.

மறைந்த கேரள கவிஞர் ஒ.என்.வி குரூப் நினைவாக, ஒஎன்வி கலாச்சார அகாதெமி, இலக்கியவாதிகளுக்கு வருடந்தோறும் விருது வழங்கி வருகிறது. இந்தச் சூழலில், இந்த ஆண்டிற்கான ஒஎன்வி விருது, கவிஞரும் பாடாலாசிரியருமான வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மலையாள பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் அனில் வல்லத்தொல், கவிஞர்கள் ஆலங்கொடி கிருஷ்ணன் மற்றும் பிரபா வர்மா ஆகியோர் இணைந்து கவிஞர் வைரமுத்துவை இவ்விருதுக்காக தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த விருது கிடைத்ததற்கு பெருமைப்படுவதாக கூறியுள்ள வைரமுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பதிவிட்ட ஊடகவியலாளர் – கைது செய்த உத்தர பிரதேச காவல்துறை

இந்நிலையில், திரைப்பட நடிகை பார்வதி திருவொத்து,” ஒஎன்வி நமது பெருமை. கவிஞராகவும் பாடலாசிரியராகவும் அவருடைய பங்களிப்பு மகத்தானது. மேலும் அது நமது கலாச்சாரத்தை எவ்வாறு செழுமைப்படுத்தியுள்ளது என்பதை எதனுடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. அவருடைய பணியினால் நமது மனதும் மூளையும் பயனடைந்துள்ளது. இந்த முக்கியமான காரணத்தினால் தான், பல்வேறு பாலியல் சீண்டல் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவருக்கு அவரின் பெயரைக் கொண்டுள்ள விருதை வழங்குவது உச்சகட்ட அவமரியாதை என்று நான் கூறுகிறேன்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ட்விட்டர் பதிவுகளை நீக்க உத்தரவிட்டது தொடர்பாக ஆர்.டி.ஐ மனு – தகவலைத் தரமறுத்த ஒன்றிய அரசு

பின்னணி பாடகி சின்மயி, சட்டரீதியாக புகாரளித்தும் கவிஞர் வைரமுத்து மீது தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்