Aran Sei

கோவாவில் கட்சித் தாவல் எதிரொலி: விசுவாசமாக இருப்போமென வழிபாட்டுத்தலங்களில் உறுதிமொழி எடுத்த காங்கிரஸ் வேட்பாளர்கள்

2017 ஆம் ஆண்டு நடந்த கோவா சட்டமன்றத் தேர்தலில் 40 இடங்களில் 17 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாகக் காங்கிரஸ் உருவெடுத்தது. ஆனால் அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் மொத்தம் 15 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவுக்குத் தாவியுள்ளனர்.

இதனால், ஜனவரி 22 அன்று கோவா சட்டமன்றத் தேர்தலுக்கான 36 காங்கிரஸ் வேட்பாளர்கள் கோவில், தேவாலயம் மற்றும் மசூதிகளில் கட்சிக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதியளித்தனர்.

2019 ஜூலையில், 10 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவுக்குத் தாவியதை அடுத்து, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது பாஜகவுக்கு வாக்களிப்பதற்குச் சமம் என்ற சந்தேகத்தை மக்களின் மனதில் உருவானது, ஆகவே அந்த சந்தேகத்தை போக்குவதற்காக இந்த உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது.

“காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாஜக சில சலுகைகளை வழங்கி ஆசை காட்டியது, அதனால் அவர்கள் கட்சி மாறினார்கள். ஆனால் அது மீண்டும் நடக்காது என்று கோவா மக்களுக்கு நாங்கள் உறுதியளிக்க விரும்புகிறோம்,” என்று காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் காமத் கூறியுள்ளார்.

Source : The Wire

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்