Aran Sei

வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னத்திற்கு மாறாக வேட்பாளர் பெயர், கல்வித் தகுதி – சட்ட ஆலோசகர்களின் கருத்தைக் கேட்கும் உச்ச நீதிமன்றம்

credits : the hindu

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் அரசியல் கட்சிகளின் சின்னத்திற்கு பதிலாக  வேட்பாளர்களின் பெயர், வயது, புகைப்படம், கல்வித் தகுதி ஆகியவற்றை வைக்கக் கோரிய மனுவில் மத்திய அரசுத் தலைமை சட்ட ஆலோசகர், கூடுதல் சட்ட ஆலோசகரின் கருத்தைக் தெரிவிக்க உச்ச நீதிமன்றம் கோரியுள்ளது.

மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, வி. ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இது தொடர்பாக எந்தவிதமான உத்தரவையும் மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்ப முடியாது எனத் தெரிவித்ததோடு, இதில்  மத்திய  அரசுத் தலைமை சட்ட ஆலோசகர், கூடுதல் சட்ட ஆலோகர்கள் ஆகியோரின் கருத்துகளை அறிய முன்வந்துள்ளது.

இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ள பாஜக மூத்த தலைவரும், மூத்த வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயேவிடம், மனுவின் ஒரு நகலை  மத்திய  அரசுத் தலைமை சட்ட ஆலோசகர் கே.கே.வேணுகோபால்,கூடுதல் சட்ட ஆலோகர் துஷார் மேத்தா ஆகியோருக்கு வழங்கிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் அதிக சொத்து வைத்திருக்கும் பாஜக – ஜனநாயக மாற்றத்திற்கான கூட்டமைப்பு அறிக்கை

வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயே தாக்கல் செய்த மனுவில், ”மின்னணு வாக்கு இயந்திரங்களில் அரசியல் கட்சிகளின் சின்னத்தைப் பதிவு செய்வது சட்டவிரோதமானது, அரசியலமைப்பை மீறும் செயலாகும். ஊழல் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை அரசியலில் இருந்து தடுக்க வாக்குப்பதிவு இயந்திரங்களில் கட்சியின் சின்னத்தை நீக்க வேண்டும். அதற்கு மாற்றாக, வேட்பாளரின் பெயர், வயது, கல்வித் தகுதி, புகைப்படம் ஆகியவை இடம் பெற செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது

வாக்கு இயந்திரங்களில் அரசியல் கட்சிகளின் சின்னம் இல்லாமல் இருந்தால், ஏராளமான நன்மை இருக்கிறது. நேர்மையான, புத்திசாலியான, வேட்பாளர்களைக் கல்வித் தகுதிமூலம் அடையாளம் கண்டு வாக்காளர்கள் வாக்களிக்க முடியும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளின் சின்னம் இல்லாமல் வாக்கு இயந்திரம் இருக்கும்போது, கட்சிகள் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில் எதேச்சதிகார நிலையைக் கட்டுப்படுத்த முடியும். மதரீதியாக, சாதிரீதியாகச் செயல்படுவோருக்கு வாய்ப்பு வழங்குவதையும் கட்டுப்படுத்த முடியும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவை கட்டுப்படுத்த நினைக்கும் நாக்பூர் அமைப்பு : இளைஞர்கள் முறியடிக்க ராகுல் காந்தி வேண்டுகோள்

சமீபத்தில் ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், 539 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 43 விழுக்காடு, அதாவது 233 பேர்மீது கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன. 2014-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற 542 நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவரங்களை ஆய்வு செய்ததில் 34 விழுக்காடு, அதாவது 185 நாடாளுமன்ற உறுப்பினர்கள்மீது கிரிமினல் வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்