Aran Sei

மருத்துவ காரணங்களுக்காக பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு : அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று முதல்வர் உத்தரவு

ற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று, மருத்துவ காரணங்களுக்காக பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, இன்று (மே 19) இரவு,  தமிழக அரசால் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ராஜீவ் காந்தி வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, சென்னை புழல் மத்திய சிறையில் இருந்துவரும் ஏ.ஜி.பேரறிவாளன் அவர்களுக்கு, மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் விடுப்பு வழங்க வேண்டுமென அவரது தாயார் டி.அற்புதம்மாள் அவர்கள் தமிழக அரசுக்கு அளித்திருந்த கோரிக்கையை பரிசீலித்து முதல்வர் ஸ்டாலின், பேரறிவாளனுக்கு உரிய விதிகளைத் தளர்த்தி, 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பெரும் நம்பிக்கையுடன் உள்ளோம்’ – திமுக வெற்றி குறித்து அற்புதம்மாள்

நேற்று (மே 18), அற்புதம்மாள் தனது டிவிட்டர் பக்கத்தில், “சிறைகளில் பரவி வரும் கொரோனா கிருமி தொற்றும், மரணங்களும் மிகுந்த அச்சத்தை தருகிறது. ஏற்கனவே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள அறிவுக்கு தொற்று ஏற்படும் ஆபத்து உண்டு என சிறைத்துறை மருத்துவர்கள் ஏற்கனவே அறிக்கை தந்துள்ளனர். மேலும் அறிவுக்கு தடைபட்டுள்ள மருத்துவத்தை தொடர வேண்டியுள்ளது.” என்று தெரிவித்திருந்தார்.

மேலும், “இதனைக் குறிப்பிட்டு நீண்ட விடுப்பு வழங்கக் கோரி 10ம் தேதி மனு அனுப்பியுள்ளேன். உச்ச நீதிமன்றம் 90 நாட்கள் விடுப்பு வழங்கலாமென 7 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது. எனவே மாண்புமிகு முதல்வர் அவர்கள் கனிவுடன் பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுக்கக் கேட்டுகொள்கிறேன்.” என்று அற்புதம்மாள் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source; செய்தி மக்கள் தொடர்புத்துறை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்