Aran Sei

தேசத்துரோகச் சட்டத்தில் பதியப்படும் போலி வழக்குகள் : நாடாளுமன்றத்தில் கடும் விவதம்

credits : the indian express

2019 ஆம் ஆண்டு 94 பேர் தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அதில் இருவர் தான் தண்டிக்கப்பட்டுள்ளனர். மற்றவை அனைத்தும் தவறான வழக்குகளே. தேசத்துரோகச் சட்டத்தை பயன்படுத்தி ஊடக சுதந்திரத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் நசுக்குவதை அரசாங்கம் நிறுத்து போவது எப்போது” என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இன்றைய தினம், நாடாளுமன்றத்தில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், சய்யா வர்மா, ”கடந்த 1860 ஆம் ஆண்டு, ஆங்கிலேயேர் ஆட்சியில், கொண்டு வரப்பட்ட தேசத்துரோகச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படுமா” என கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த, மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி, இந்தச் சட்டம் 1948 மற்றும் 1955 ஆம் ஆண்டுகளில் திருத்தப்பட்டது. இது புதியச் சட்டம் இல்லை. இதில் நாங்கள் பெரும் சீர்திருத்தத்தைக் கொண்டு வர இருக்கிறோம். இந்திய தண்டனைச் சட்டத்தில் சில திருத்தங்களைப் பரிந்துரை செய்ய ஒரு குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

கலவரத்துக்கு ஒரு ஆண்டுக்குப் பிறகும் தொடரும் பலி வேட்டை : டெல்லி காவல்துறைக்கு கண்டனம்

இதையடுத்து பேசிய சய்யா வர்மா “2019 ஆம் ஆண்டில், தேசத்துரோக சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை 165 சதவீகம் அதிகரித்துள்ளது” என்று குற்றம் சாட்டினார். மேலும், ”இந்த வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில், வெறும் இரண்டு சதவீதத்தினர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர், அப்படியேன்றால் மற்றவை அனைத்தும் போலியான வழக்குகளா”? என்று வர்மா கேள்வியெழுப்பியுள்ளார்.

போலீஸ் துப்பாக்கிச் சூடும், பத்திரிகையாளர்கள் மீதான வழக்குகளும் – தி கார்டியன் ரிப்போர்ட்

இதற்குப் பதிலளித்த கிஷன் ரெட்டி, ”தேசத்துரோக வழக்கு முன்னர் தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் அட்டவணைப்படுத்தவில்லை. மோடி அரசாங்கம் பொறுப்பேற்ற பின்பே, நாங்கள் குற்றங்களைத் தனித்தனியாக அட்டவணைப்படுத்த தொடங்கினோம். சமூக ஊடகங்களில், கோடிக்கணக்கான மக்கள் இந்தியாவின் மாண்பை விமர்சிக்கின்றனர், அதைக் கருத்தில் கொள்ளும்போது, இந்த வழக்குகள் அதிகம் இல்லை, வெறும் இரட்டை இலக்கத்தில் தான் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்த குழந்தைகள்: விபத்தை வெளிகொணர்ந்த மருத்துவரை குற்றாவாளிகள் பட்டியலில் இணைத்த யோகி அரசு

”இந்த வழக்குகளில் தண்டனைகள் உறுதி செய்யப்படுவது அரசாங்கத்தினால் அல்ல, நீதிமன்றத்தினால் தான் எனவும் அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.எஸ்.துல்சி, ”தேசத்துரோக சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர்களின் எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டில் மட்டுமே 160 சதவீதம் அதிகரித்தது எவ்வாறு” என கேள்வியெழுப்பினார்.

‘உங்களுக்கு எத்தனை முறை சொல்வது?’ – மதமாற்ற விவகாரத்தில் உ.பி., அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்

மேலும், ”2019 ஆம் ஆண்டு 94 பேர் தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர், ஆனால் அதில் இருவர் தான் தண்டிக்கப்பட்டுள்ளனர். மற்றவை அனைத்தும் தவறான வழக்குகளே. தேசத்துரோகச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடக சுதந்திரத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் நசுக்குவதை அரசாங்கம் நிறுத்துப் போவது எப்போது” எனக் கேள்வியெழுப்பினார்.

டெல்லி கலவரம் – விசாரணைக் குழு போலீசாரில் 4 பேருக்கு பதவி உயர்வு

இதற்குப் பதிலளித்த ரெட்டி, ”இந்த வழக்கின் கீழ் கைது செய்யச் சொல்லி, மத்திய அரசு மாநில அரசுக்கு உத்தரவிடுவது இல்லை. இந்தச் சட்டம் காங்கிரஸ் ஆட்சி காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ளது. காங்கிரஸ் ஆளும் மாநிலமான ராஜஸ்தானில், கடந்த 2015 ஆம் ஆண்டு 9 பேர் மீது தேசத்துரோக சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

ஹத்ராஸ் வழக்கில் உத்தரபிரதேச அரசின் பொய் அம்பலமாகியுள்ளது – அகிலேஷ் யாதவ்

மேலும், “மாநிலங்கள் தான் இது போன்று வழக்குப் பதிவு செய்கிறது, மத்திய அரசு எந்த வலியுறுத்தலும் செய்வதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் தேர்வு – டிரம்ப் தரப்பு எதிர்ப்பு தொடர்கிறது

ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் மனோஜ் குமார் ஜா, ”அதிகளவிலான நபர்கள் கைது செய்யப்படும் சூழலில், அரசை விமர்சிப்பவர்கள் மற்றும் தேசத்தை விமர்சிப்பவர்கள் என இரு தரப்பினரை அடையாளம் காண காவல்துறையினருக்கு சிறப்புப் பயிற்சி ஏதேனும் அளிக்கபட இருக்கிறதா” என கேள்வியெழுப்பினார்.

ஓடிடி (OTT) தளங்கள் மீது தார்மீக கண்காணிப்பு : இந்திய தணிக்கை சகாப்தத்தின் சமீபத்திய நிகழ்வு

இதற்குப் பதிலளித்த மத்திய இணை உள்துறை அமைச்சர், ஜி.கிஷன் ரெட்டி, ”இந்திய குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டத்தின் போதும், விவசாயப் போராட்டத்தின் போதும், போலியாக ஒரு வழக்குகள் கூட அரசுப் பதிவு செய்யவில்லை” எனவும் ”மக்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம், நாங்கள் யாரையும் தடுக்க மாட்டோம்” எனவும் கூறியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்