Aran Sei

விவசாய சட்டங்கள் குறித்து விவாதிக்க எதிர்கட்சிகள் கோரிக்கை – அனுமதி மறுத்த சபாநாயகர் அவையை 4 முறை ஒத்திவைத்தார்

Image Credits: DNA India

நாடாளுமன்ற மாநிலங்களவை தொடங்கியதும், சபாநாயகர் வெங்கையா நாயுடு விவாதங்கள் கண்ணியமாக இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் அவையை தொடங்கினார்.

“கடந்தமுறை கசப்பான சில நிகழ்வுகள் நடந்துவிட்டன. அதை நான் நினைவுகூற விரும்பவில்லை. உறுப்பினர்கள், விவாதங்களில் கண்ணியமான முறையில் பங்கேற்க வேண்டும்” என்று வெங்கையா நாயுடு வேண்டுகோள விடுத்தார்.

இதைத்தொடர்ந்து, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாநிலங்களவை அலுவலை நாள் முழுவதும் ஒத்திவைத்தி விட்டு, மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று ஒத்திவைப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தனர்.

டெல்லி எல்லையில் எழுப்பப்படும் தடுப்புச் சுவர்கள்: ‘விவசாயிகளுடன் பிரதமர் போர் செய்யவுள்ளாரா?’ – காங்கிரஸ் கேள்வி

“உறுப்பினர்களின் கவலை புரிகிறது. இந்த அவையின் தலைவர் என்ற அடிப்படையில், விவசாயிகள் எடுத்துள்ள நிலைபாடு குறித்து என்னால் கருத்து கூற முடியாது” என்று கூறிய சபாநாயகர், நாளை (03.02.21) குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறவுள்ளதாகவும், அதில் உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம் என்றும் கூறினார்.

ஆகவே, ஒத்திவைப்பு தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சபாநாயகர் கூறினார்.

மியான்மர் இராணுவப் புரட்சி – ஆட்சிகள் மாறியும் காட்சிகள் மாறவில்லை

இதற்கு பதிலளித்த திமுக உறுப்பினர் திருச்சி சிவா “நூற்றுக்கணக்கான விவசாயிகள், கடும் குளிரில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய பிரச்சனை குறித்து நாங்கள் விவாதிக்க வேண்டும்” என்று கூறினார்.

“நமக்கு உணவளிப்பவர்கள் தெருவில் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களைத் தவிர்த்துவிட முடியாது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பினாய் விஸ்வம் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த சபாநாயகர் வெங்கையா நாயுடு “வேளாண் சட்டங்கள் குறித்த இந்த அவையில் விவாதிக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவு படுத்த விரும்புகிறேன். அதற்காக நான்கு மணி நேரம் ஒதுக்கப்பட்டது, நான்கு மணி நேரம் விவாதம் நடைபெற்றது. விவாதமே நடைபெறவில்லை என்பதுபோல் தவறான பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

’தேசியவாத பாடம் நமக்கு; தேசத்தின் வளம் தனியாருக்கு’ – பட்ஜெட் குறித்து மம்தா பானர்ஜி

அதைத்தொடர்ந்து, கேள்வி நேரம் தொடங்கியது. உடனே எதிர்கட்சி உறுப்பினர்கள், விவசாயிகளுக்கு ஆதரவாக அவையில் கோஷம் எழுப்பத் தொடங்கினர். சிலர் சபாநாயகர் இருக்கை முன்பு சென்று கோஷங்களை எழுப்பினர்.

கேள்வி நேரத்தை நடத்த ஒத்துழைக்கும்படி, சபாநாயகர் கோரிக்கை விடுத்தார். ஆனால், எதிர்கட்சிகள் தொடர்ந்து விவசாயிளுக்க ஆதரவாக கோஷம் எழுப்பியதால், அவையை சபாநாயகர் வெங்கையா நாயுடு 10.30 மணி வரை ஒத்தி வைத்தார்.

கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டைக் கூறுபோட்டு விற்கும் வெகுமக்கள் விரோத பட்ஜெட் – திருமாவளவன் கண்டனம்

அவை மீண்டும் தொடங்கியபோது எதிர்கட்சிகள் தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதால், அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வாறாக, மதியம் 1 மணி வரையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் எந்த வித அலுவலம் நடைபெறாமல், அவை, நான்கு முறை ஒத்திவைக்கப்பட்டது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்