Aran Sei

தொடர்ந்து வலியுறுத்தியும் பென்சன் தொகையை உயர்த்தாதது ஏன்? – மத்திய அரசிடம் நாடாளுமன்ற நிலைக் குழு கேள்வி

Image Credits: DNA India

மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டுவரும் “சொற்பமான” பென்சன் தொகையை உயர்த்தாதது ஏன் என்று, ஊரக வளர்ச்சித்துறைக்கான நாடளுமன்ற நிலைக் குழு, மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ஏழைகள், மூத்த குடிமக்கள், கைம்பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசு, மாதந்தோறும் பென்சன் வழங்கி வரும் நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த தொகையை உயர்த்துவதற்கு பரிந்துரை செய்தும், மத்திய அரசு இதில் அலட்சியம் காட்டியுள்ளதாக நிலைக்குழு குற்றம்சாட்டியுள்ளது என, அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் – ‘டைம்ஸ் நவ்’ கருத்துக் கணிப்பு முடிவு

மத்திய அரசின், தேசிய சமூக உதவி திட்டத்தின் கீழ், வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள மூத்த குடிமக்களுக்கு மாதந்தோறும் 200 முதல் 500 ரூபாய் பென்சன் வழங்கப்படுகிறது. இதேபோல், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள, 40 வயதை தாண்டிய கைம்பெண்களுக்கு மாதம் 300 முதல் 500 ரூபாயும், 18 வயதிற்கு மேல் 79 வயதிற்குள் உள்ள, அதிகம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 300 ரூபாயும் பென்சனாக வழங்கப்படுகிறது.

இதுதொடர்பாக, ஊரக வளர்ச்சித்துறைக்கான நாடளுமன்ற நிலைக் குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், இனியும் காலம் தாழ்த்தாமல், பென்சன் தொகையை மத்திய அரசு உடனே உயர்த்தி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்