Aran Sei

பிரான்சில் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராகப் போராட்டம் – 150 பேர் கைது

Image Credits: The New York Times

பிரெஞ்சு மக்கள், அரசால் முன்மொழியப்பட்ட பாதுகாப்புச் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதில் கிட்டத்தட்ட 150 பேரைப் பாரிஸ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவிக்கக் கூடும் எனும் சந்தேகத்தின் பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தி இந்து  செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு மசோதாவின்படி, பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கோடு காவல் அதிகாரிகளின் புகைப்படங்களை வெளியிட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும். இதன்படி, காவலர்களைப் படம் பிடிப்பது பெரும் சிக்கலை ஏற்படுத்தும். காவல்துறை அராஜகத்தை வெளியே கொண்டுவரும் ஊடகச் சுதந்திரத்திற்கு இது தடையாக அமையும் என்று சமூகச் செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.

`தகவல் அறியும் சுதந்திரத்தை மீறுவதா’ – பிரான்ஸில் வெடித்த போராட்டம்

எனவே, இதற்கு எதிராகப் பிரான்சில் பரவலாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. முந்தைய போராட்டங்களின் போது கடைகள் சூறையாடப்பட்டன, வாகனங்கள் உடைக்கப்பட்டன. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்பதாலும், வன்முறைக் குழுக்களுடன் இவர்கள் இணைந்துவிடுவார்கள் எனும் சந்தேகம் ஏற்பட்டதாலும் காவலர்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர் என்றும் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

142 பேரைக் காவலர்கள் கைது செய்துள்ளார்கள் என்று உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து நடைபெற்ற பேரணியில் பாரிஸ் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அப்போது முந்தைய போராட்டங்களில் வெடித்தது போல் வன்முறை வெடிக்கக் கூடாது எனும் நோக்கோடு காவலர்கள் போராட்டத்தைத் தடுத்துள்ளனர்.

பேரணி முடிந்தவுடன் நீர்ப் பீரங்கிகளைப் பயன்படுத்திப் போராட்டக்காரர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்துள்ளனர்.

மசோதாவுக்கு எதிராகப் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளதால் பிரெஞ்சு அரசு தற்போது அதை நிறுத்துவதற்கான முடிவுக்கு வந்துள்ளது.

பேரணியில் ஈடுபட்டவர்கள், “நான் ஒருபோதும் படப்பிடிப்பை நிறுத்த மாட்டேன்” (I will never stop filming) மற்றும் “கேமரா சிதைவுக்குச் சமமா?” (Camera equals mutilation?) போன்ற பதாகைகளை ஏந்திப் போராடினர்.

மற்ற நகரங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. லியோன் நகரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்