சிறார்கள் பரவலாக செல்போன் பயன்படுத்துவதே பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரிக்கக் காரணம் என்று ராஜஸ்தான் மாநில காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Incidents of crime against women are rising.Police is taking action…In Jhunjhunu case,it emerged that accused use to see porn&consume drugs.Due to online classes due to COVID,children now use smartphones,it may be that after classes they indulge in such things: Rajasthan DGP pic.twitter.com/z5elxm28Nr
— ANI (@ANI) March 19, 2021
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜுனுஜுனு பகுதியில் நடந்த 5 வயது சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பாக தெரிவிக்கையில் மாநில காவல்கண்காணிப்பாளர் பூபேந்திர சிங் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு – போராட்டம் நடத்தச் சென்ற கனிமொழியை தடுத்து நிறுத்திய காவல்துறை
இந்த வழக்கு குறித்து அவர் கூறுகையில் , ஜுனுஜுனு வழக்கில் குற்றவாளி தொலைபேசியை ஆபாசப்படம் பார்ப்பதற்கும், போதை பழக்கத்திற்கு உள்ளாவதற்கும் பயன்படுத்தியுள்ளார் என்றும் அது குற்றம் புரிய முக்கிய காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் “இதே போல கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்பினால் இளைஞர்கள் பரவலாக தொலைபேசியைப் பயன்படுத்துவதும் பெண்கள் மீதான குற்றத்திற்கு காரணம் ” என்றும் பூபேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் தொலைபேசி பயன்பாடு குறித்து தெரிவித்த பூபேந்திர சிங், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தொலைபேசியை சரியாக பயன்படுத்துகிறார்களா என்று கண்காணிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
பெண்களை தவறாக பேசியவரை தாக்கிய பெண்களுக்கு முன் ஜாமீன் – கேரள உயர் நீதிமன்றம்
ஜுனுஜுனு பகுதியில் 5 வயது சிறுமியை 21 வயது இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
SOURCE : ANI , THE INDIAN EXPRESS
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.