Aran Sei

அமைச்சரின் குற்றச்சாட்டுகளை நேர்மையாக விசாரிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம் கண்காணிக்க முன்னாள் காவல் ஆணையர் வேண்டுகோள்

காராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை பக்கச்சார்பின்றி நேர்மையாக விசாரிக்க வேண்டும் எனக் காவல்துறை முன்னாள் ஆணையர் பரம் பீர் சிங் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.

மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு – முதலமைச்சர் முடிவு எடுப்பார் என சரத் பவார் அறிவிப்பு

உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், மாதத்திற்கு 100 கோடி ரூபாய் திரட்டித்தர இலக்கு நிர்ணயித்ததாக பரம் பீர் சிங் குற்றம் சாட்டியிருந்ததார்.

மேலும், காவல் துறையின் செயல்பாடுகளில் அனில் தேஷ்முக் தலையிடுகிறார் என்றும் பரம் பீர் சிங் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார் .

டிஆர்பி-யில் முறைகேடு – ரிபப்ளிக் டிவி மீது குற்றச்சாட்டு

இந்தச் சம்பவம்குறித்து அவர் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேக்கு எழுதியுள்ள கடிதத்தில், அனில் தேஷ்முக் குறித்து மத்திய புலனாய்வு குழு அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அந்தக் குழுவை உச்சநீதி மன்றம் கண்காணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.

 

‘ரிபப்ளிக் டிவி பொய்யான தகவலைப் பரப்புகிறது’ – அர்னாப் மீது பிஏஆர்சி குற்றச்சாட்டு

இந்நிலையில் பரம் பீர் சிங் அவரது குற்றச்சாட்டுகள்குறித்து நேர்மையாக விசாரிக்கப்பட வேண்டுமென உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்

source:THE HINDU

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்