வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தின்போது, டெல்லி காவல்துறை நிகழ்த்திய வன்முறைகள்குறித்து ஆராய, பஞ்சாப் அரசு சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையிலான குழுவொன்றை அமைத்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் குழு, நவான்சஹர் மாவட்டத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டு, அவர்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது
மேலும், இந்தக் குழு காவல்துறையினரால் வழக்கு பதியப்பட்ட மற்றும் கைதுசெய்யப்பட்ட விவசாயிகளின் தகவல்களை சேகரித்து வருவதாவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவித்துள்ளது.
இந்தக் குழு, கடந்த ஜனவரி 29 அன்று, காவல்துறையைத் தாக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டு காவல்துறையால் கடுமையாகத் தாக்கப்பட்ட, விவசாயி ரஞ்சித் சிங்கை சந்தித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் குழு பஞ்சாப் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் விவசாயிகளை சந்திக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநில அரசு அமைத்துள்ள இந்த சட்டமன்ற உறுப்பினர் குழுவில் குல்தீப் சிங் வைட் ஹரிந்தர் பால் சிங் சந்துமாஜ்ரா, குல்பீர் சிங் ஜிரா, ஃபதே ஜங் பஜ்வா மற்றும் சரப்ஜித் கவுர் மானுகே ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.