Aran Sei

‘வெளிநாடுகளில் சொத்துக்களை பதுக்கி இருக்கும் இந்தியர்கள்’ – சச்சின், அனில் அம்பானி உள்ளிட்டோரின் பெயர்களை வெளியிட்ட பண்டோரா பேப்பர்ஸ்

ந்தியாவைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட 300க்கும் அதிகமானோர் வெளிநாடுகளில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக பண்டோரா பேப்பர்ஸ் தெரிவித்துள்ளது.

பிபிசி, தி கார்டியன், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட உலகின் 150 ஊடக நிறுவனங்கள் அடங்கிய புலனாய்வு பத்திரிக்கையாளர்களுக்கான சர்வதேச கூட்டமைப்பு (ஐசிஐஜெ) பண்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள சட்டம் மற்றும் நிதி சேவை வழங்கும் 14 நிறுவனங்களில் இருந்து 1.19 கோடி ஆவணங்களை ஐசிஐஜெ கைப்பற்றியுள்ளது.

உலகை குலுக்கியுள்ள ‘பண்டோரா பேப்பர்ஸ்’ விவகாரம் – வருமானத்தை வெளிநாடுகளில் பதுக்கிய பிரபலங்கள்

பண்டோரா பேப்பர்ஸ் வரலாற்றில் அதிகபட்சமாக இந்த முறை 2.94 ஜிபி டேட்டா அளவிலான தரவுகள் வெளியாகியுள்ளன.

பாப் பாடகி ஷாகிரா, ஜோர்டான் மன்னர், கென்யா, உக்ரைன் அதிபர்கள், முன்னாள் பிரிட்டன் பிரதமர் டோனி பிளேயர் உள்ளிட்டோரும் சட்ட விரோதமான முறையில் வெளிநாடுகளில் சொத்துக்களை குவித்திருப்பதாக ஐசிஐஜே குற்றம்சாட்டியுள்ளது.

உத்தரபிரதேச வன்முறை – ஒன்றிய உள்துறை இணையமைச்சர் மகன் மீது கொலை வழக்கு பதிவு

இந்தியாவை பொறுத்த வரையில் சச்சின் டெண்டுல்கர் அவரது மனைவி அஞ்சலி டெண்டுல்கர், மாமனார் ஆனந்த் மேத்தா, அனில் அம்பானி, நீரவ் மோடியின் சகோதரி பூர்வி மேத்தா ஆகியோர் வெளிநாடுகளில் சொத்து சேர்த்துள்ளதாக பண்டோரா பேப்பர்ஸ் தெரிவித்துள்ளது.

கடும் நட்டத்தில் இருப்பதாக கூறி இழப்பீடுகளை பெற்று வரும் அனில் அம்பானியின் பெயரில் 130 கோடி அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 9656 கோடி ரூபாய்) மதிப்பிலான சொத்துக்கள் வெளிநாடுகளில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo Credit : The Indian Express

நீரவ் மோடி இந்தியாவை விட்டுத் தப்பிச் செல்லுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட அறக்கட்டளைமூலம் அவரது சகோதரி பூர்வி சொத்துக்கள் வாங்கியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

”சச்சின் டெண்டுல்கருக்கு சொந்தமான சாஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரில் பிரிட்டீஷ் வெர்ஜின் தீவுகளில் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன. இவை சச்சின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த காலத்தில் 2016 ஆம் ஆண்டில் வாங்கப்பட்டுள்ளது” என பண்டோரா பேப்பர்ஸ் குறிப்பிட்டுள்ளது.

சச்சின் பெற்ற சொத்துகள் அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டு பெற்றப்பட்டிருப்பதாகவும், சொத்துக்களின் வருமான வரி செலுத்தப்படுவதாகவும் சச்சின் டெண்டுல்கர் அறைக்கட்டளையின் இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான மிர்ன்மோய் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

Source : PTI

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்