Aran Sei

“எக்காரணத்திற்காகவும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது” – தொடங்கியது மக்கள் போராட்டம்

ஸ்டெர்லை ஆலையை எந்தக் காரணத்திற்காகவும் திறக்கக் கூடாது எனக்கூறி தூத்துக்குடி பண்டாரம்பட்டி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம்பட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“ஸ்டெர்லைட் ஆலையை எந்தக் காரணத்திற்காகவும் மீண்டும் திறக்கக் கூடாது” என கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.

‘மறைமுகமாக, குறுக்கு வழியில், ஸ்டெர்லைட் ஆலையை இயக்க தமிழ்நாடு அரசு வழிசெய்து விட்டது’ – வைகோ குற்றச்சாட்டு

பின்னர் அந்தப் பகுதிக்கு வந்த காவல்துறையினர், “ஆலை நான்கு மாதங்களுக்கு மட்டுமே இயங்கும், ஆக்சிஜன் உற்பத்தியைத் தவிர வேறு எதுவும் உற்பத்தி செய்யப்படாது” என உறுதியளித்தனர்.

மேலும், ”நாளை மாவட்ட ஆட்சியிருடன் பேச்சுவார்த்தை நடத்த உங்களை (கிராம மக்களை) அழைத்துச் செல்கிறோம். உங்களுக்கு இருக்கும் அனைத்து சந்தேகங்களையும் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்” என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து, மாவட்ட ஆட்சியர் உடனான சந்திப்பிற்கு பிறகு ஊர் கூட்டம் நடத்தி போராட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக முடிவு எடுக்கலாம் என தீர்மானம் செய்த கிராம மக்கள், அதுவரை போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்