Aran Sei

ஆர்யன் கான் வழக்கு: போதைப் பொருள் தடுப்பு பிரிவின் சாட்சியங்கள் நம்பத் தகுந்ததாக இல்லை – சிறப்பு நீதிமன்றம் கருத்து

ந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு போதைப் பொருள் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட ஆச்சிட் குமாரின் ஜாமீன் மனு மீதான உத்தரவில், வாட்ஸ் ஆப் உரையாடலை வைத்து, குமார் மீது குற்றம் சுமத்த முடியாது என்று போதைப் பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஆச்சிட் குமாருக்கு ஜாமீன் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தவிட்ட நிலையில், அதன் முழு உத்தரவு நேற்று (31.10.21) வெளியிடப்பட்டுள்ளது. அந்த உத்தரவில், தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்பின் (National Narcotics Bureau) சாட்சிகள் சந்தேகத்திற்கிடமாக உள்ளது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஆர்யன் கானுடன் நடத்தியுள்ள வாட்ஸ் ஆப் உரையாடலைத் தரவிர இந்த வழக்கில் குமார் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரம் இல்லை என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி வி.வி.பாட்டில் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

“சாட்சிகள் புனையப்பட்டு மற்றும் குற்றம் நடைபெற்றதாக கூறப்படும் இடத்தில் சாட்சியத்திற்கான ஆவணங்கள் தயாரிக்கப்படவில்லை. ஆகவே, சாட்சியத்தின் படி கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் பொருட்கள் (போதைப் பொருட்கள்) சந்தேகத்தை ஏற்படுத்துவதுடன் நம்பத்தகுந்ததாக இல்லை” என்று நீதிபதி வி.வி.பாட்டில் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

ஆகவே, ஆர்ச்சிட் குமார், ஆர்யன் கானுக்கு போதைப் பொருள் வழங்கினார் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்பதால் ஆர்ச்சிட் குமாருக்கு ஜாமீன் வழங்கப்படுவதாக நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்யன் கான் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 17வது நபரான ஆர்ச்சிட் குமார் அக்டோபர் 6 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்தபோது 2.6 கிராமம் கஞ்சாவை பறிமுதல் செய்ததாக கூறிய தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்பு, ஆர்ச்சிட் குமார் ஆர்யன் கானுக்கு போதைப் பொருட்களை வழங்கியதாக குற்றம்சாட்டியது.

இந்த வழக்கில் 20 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது 14 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

ஆர்யன் கான், அர்பாஸ் மெர்ச்சன்ட், முன்முன் தமேச்சா ஆகியோருக்கு மும்பை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் ஜாமீன் வழங்கியுள்ள நிலையில், பிறருக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்