Aran Sei

கடலூரில் மீட்கப்பட்ட பஞ்சமி நிலம் – 4 ஏக்கர் நிலத்தை ஒப்படைக்க நீதிமன்றம் தீர்ப்பு

க்கிரமிக்கப்பட்ட நான்கு ஏக்கர் பஞ்சமி நிலத்தை உரியவருக்கு வழங்கக் கோரி பண்ருட்டி மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மலிகம்பட்டு கிராமத்தில் வசித்து வந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த ஆறுமுகம் சாம்பான் மகன் தனபால் சாம்பான் என்பவருக்கு 4 ஏக்கர் 15 சென்ட் பஞ்சமி தரிசு  நிலம் சொந்தமாக இருந்து வந்துள்ளது. அந்நிலத்தை அதே கிராமத்தில் வசிக்கும் பிற சமூகத்தைச் சேர்ந்த பாண்டுரங்க சமட்டியார் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து வந்துள்ளார். பாண்டுரங்க சம்பட்டியார் கிராம நிர்வாக அலுவலராகப் பணியில் இருந்தவர் என்பதால் நிலம் தொடர்பான வருவாய் துறை ஆவணங்களில் தனது பெயருக்கு மாற்றம் செய்து கொண்டார். நிலம் தொடர்பான வழக்கு பண்ருட்டி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்துள்ளது. இந்த வழக்கில் தனபால் சாம்பான் வாரிசுகளுக்கு ஆதரவாகத் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் ஆஜராகி வழக்கை முன்னெடுத்த வழக்கறிஞர் தணிகைச் செல்வன் அரண்செய் – யிடம் பேசினார். அதில் “தலித்தல்லாதவர் பஞ்சமிதரிசு நிலத்தைக் கிரையம் பெற்றது செல்லாது என்றும், பஞ்சமிதரிசு நிலத்தைப் பொருத்து தலித்தல்லாதவரின் அனுபவ பாத்தியம் செல்லாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக” கூறினார்

வழக்கறிஞர் தணிகைச் செல்வன்

மேலும் “பஞ்சமிநிலம் சம்பந்தப்பட்ட உரிமைக்கான ஆவணங்களான கிரையம், அடமானம், கொடை உள்ளிட்ட பத்திரங்கள் எதுவும் தனபால் சாம்பான் வாரிசுகளிடம் இல்லை  அதேபோல் உடைமைக்கான ஆவணங்கள் பட்டா & சிட்டா, “அ” பதிவேடு, அடங்கல் உள்ளிட்ட வருவாய்த்துறை ஆவணங்கள் எதுவும் தனபால் வாரிசுகள் பெயரில் இல்லை. ஆனால் இவையனைத்தும் பாண்டுரெங்கன்சமுட்டியார் வசம் இருந்தது” என்று தெரிவித்தார்.

இந்தச் சூழலில்தான் இந்த வழக்கை நடத்தியதாகவும், அந்நிலம் பஞ்சமிதரிசு நிலம் என்பதை நிறுவிட அவர்கள்  பெரும்முயற்சிகள் எடுத்ததாகவும் கூறினார்.

’பட்ஜெட் கூட்டத்தொடரின் குடியரசு தலைவர் உரையை புறக்கணிப்போம்’ – விவசாய சட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அறிவிப்பு

பஞ்சமி நிலத்தில் பாண்டுரங்க சம்பட்டியார் முந்திரி பயிரிட்டதாகவும், அந்த இடம் தற்போதுவரை ’பறையங்காடு’ என்று பேச்சு வழக்கில் அழைக்கப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர், வட்டாச்சியர் அலுவலகத்தில் உள்ள பழைய ஆவணங்களைக் கொண்டு பஞ்சமி நிலங்களை மீட்க முடியும் என்று வழக்கறிஞர் தணிகைச்செல்வன் நம்பிக்கை தெரிவித்தார்.

இவ்வழக்குத் தொடர்பாகப் பல்வேறு மிரட்டல்களைச் சந்தித்த்தாகக் கூறிய அவர், பஞ்சமி நில மீட்பு விவகாரத்தை ஒரு இயக்கமாகச் சேர்ந்து முன்னெடுக்கும்போது மட்டுமே பலன் கிடைக்கும் என்று கூறினார்.

’வளரும் பொருளாதாரத்தை அழிப்பது எப்படி? பாடம் எடுக்கும் மோடி அரசு’ – ராகுல் காந்தி விமர்சனம்

தலித் இயக்கங்கள், கட்சிகள், முற்போக்கு இயக்கங்கள் உள்ளிட்டவை நிலமீட்புக்கு உறுதுணையாக இருந்தால் இவ்வருடத்தில் மட்டுமே சில நூறு ஏக்கர் நிலங்களை மீட்க முடியும் என்றார்.

“பெயரளவில் தலித் ஆதரவு என்று சொல்லாமல் பஞ்சமி நில மீட்புக்கு ஜனநாயக சக்திகள் கைக்கொடுக்கும்போதுதான் இப்போராட்டம் வெல்லும்” என்று வழக்கறிஞர் தணிகச்செல்வன்  அரண்செய் – யிடம் தெரிவித்தார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்