Aran Sei

தாக்குதலுக்கு அஞ்சி பாலஸ்தீன மக்கள் முகாம்களில் தஞ்சம் – தாக்குதல் தொடருமென இஸ்ரேல் அரசு அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேலியப் படையினர் தொடர்ந்து வான்வழித்தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பதாகவும், மேலும், இஸ்ரேலியப் படையினர் தரைவழியாகவும் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளதாகவும் அல்-ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மே 10 அன்று முதல் இஸ்ரேலியப் படையினர் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 920 பேர் காயமடைந்துள்ளதாகவும், நேற்று மே 14 நடந்த தாக்குதலில் 36 குழந்தைகள் உட்பட 137 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் 31 குழந்தைகள் உட்பட 113 பாலஸ்தீனர்கள் மரணம் : தரைவழியாகவும் தாக்க இஸ்ரேல் திட்டம்

இதே போன்று, ஷாதி அகதிகள் முகாமில் நடந்த தாக்குதலில் 2 பெண்கள், 6 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அல்-ஜசீரா செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இஸரேலியப் படையினரின் தாக்குதலுக்கு அஞ்சி ஏறத்தாழ 10,000 மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் ஐக்கிய நாடுகள் நடத்தும் பள்ளிகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள், இஸ்ரேல் அரசின் வன்முறைக்கு எதிராகவும், ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும் பாலஸ்தீனத்தின் மேற்கு பகுதியில் பேரணி நடத்தியுள்ளதாக அல் -ஜசீரா செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெருசலேம் மசூதி வளாகத்தில் இஸ்ரேலிய படையினர் தாக்குதல் – 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காயம்

இந்நிலையில், இஸ்ரேல், பாலஸ்தீனம் அமைதிகாக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் அவையின் தலைவர் அன்டோணியோ குட்டேர்ஸ் கூறியுள்ள நிலையிலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு தாக்குதல் தொடரும் என்று அறிவித்துள்ளதாக அல்-ஜசீரா செய்தி குறிப்பிடுகிறது.

மேலும், இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்